நவனீதம்பிள்ளையின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர்?

Navaneetham-pillay1ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசேட ஆணைக்குழுவின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இலங்கையர் ஐந்து பெயர்களில் தோன்றியவர் என ஐரோப்பாவில் கடமையாற்றி வரும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கையர் வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் இரகசிய சாட்சியமளிக்க உள்ளார்.

நேபாளத்தில் இருந்த குறித்த நபரை ஐக்கிய நாடுகள் அதிகாரியொருவர் சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரிற்கு அழைத்துச் சென்று அரசியல் புகலிடம் வழங்கியுள்ளார்.

மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக சாட்சியமளிக்க இவர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 20ம் திகதி நவனீதம்பிள்ளையின் விசாரணைக்குழு நியமிக்கப்பட உள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: