உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதனை கொச்சைப்படுத்துவதனை வன்மையாக கண்டிக்கின்றோம். சீ.வி.விக்னேஸ்வரன்

vikneswaran01உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதனையும் எங்கள் மனக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதனையும் சிறீலங் கா அரசாங்கம் அரசியல்ரீதியாக பார்ப்பதனையும் கொச்சைப்படுத்துவதனையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அவை எமக்கு மிகுந்த மனவேதனையினை கொடுத்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2009-மே-18ம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுடைய நினைவு தினம் இன்றைய வட மாகாணசபையின் 9ம் அமர்வில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் 2009ம் ஆண்டு மே-18ம் திகதி பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிர் நீத்தார்கள். எத்தனைபோர்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளுக்கான பதில்களை சர்வதேச நாடுகள் விசாரi ண செய்ய இருக்கின்றன. எனவே அவை ஒரு புறமிருக்க. எம்மை பொறுத்தவரையில் எம் உறவுகள் திடீரென பெருவாரிய hக உயிர்நீத்ததனை

நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும். இறந்துபோனவர்களுடைய ஆத்மாக்கள் சாந்தி பெறுவதற்காகவும் எங்கள் உள்ளக் கிடக்கைகள் நீங்குவதற்காகவும் நாங்கள் அவர்களை நினைவில் கொள்ளவேண்டும். இவ்விடயம் தொடர்பாக அண்மைக்கா லத்தில் பல முரண்பட்ட கருத்துக்கள் உருவாகியிருக்கின்றன. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களை நினைவுபடு த்தி எங்கள் மன உளைச்சலை வெளிப்படுத்துவதை
அரசாங்கம் மிக வித்தியாசமான முறையில் பார்க்கின்றது.

மறுபக்கம் இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வந்துவிடுவார்களேh என்ற பயத்தினாலோ என்னவோ நாங்கள் தீபம் ஏற்றும் இடங்களுக்கும் அஞ்சலி செலுத்தும் இடங்களுக்கும் படையினர் வருகின்றார்கள் தீபங்களை அணைக்கின்றார்கள் மக்களை கைதுசெய்கின்றார்கள். உன்மையில் இவை தேவையற்ற விட யங்களாகும்.

மேலும் இறந்தவர்களை நாங்களும் அஞ்சலிக்க பல வழிகள் இருக்கின்றன. ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை நடத் தலாம் வறிய மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளை வழங்கலாம். உதாரணமாக வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெய ர்ந்து வந்து மிக கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் எவ்விதமான உதவிகளையும் வழங்கவில்லை. மாறாக n காடுத்தவற்றையும் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் அண்மையில் நாங்கள் ஒரு ஒழுங்கமைப்பினைச் செய்து அவர்களுக்கு உலர் உணவினை வழங்கியிருக்கின் றோம். எனவே இறந்துபோனவர்களின் நினைவுகளை அரசியலுக்காக அரசியல் மேடைகளுக்கு கொண்டுவருவது சரியானத ல்ல. அதற்கான எங்கள் மன உளைச்சலை நாங்கள் வெளிப்படுத்தக்கூடாது என்பது பொருள் அல்ல. இந்நிலையில் எங் கள் மக்கள் அதிகளவில் உயிரிழக்க காரணம் என்ன? என்பதனை சர்வதேச நாடுகள் அறிந்து கூறவிருக்கின்றன.

எது எவ்வாறானாலும் இறந்துபோன எங்கள் மக்களுக்கு நாங்க ள் செலுத்தும் அஞ்சலிகளை அரசாங்கம் அரசியல் ரீதியாக பார்ப்பதை கொச்சைப்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கின்றோம் அதனால் நாங்கள் மனவேதனையடைந்திருக்கின்றோம் என்பதற்கான அடையாளமே இந்த கறுப்பு பட்டியாகும் என்றார்.

இதேவேளை இன்றைய அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக மெழுகுவர்த்திகள் ஏந்தி மாகாணசபை உறுப்பினர்கள் அஞ்சலிகளை செலுத்தினர்.

TAGS: