தெலோக் இந்தானில், நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான பரப்புரை இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள வேளையில், துணைப் பிரதமர் முகைதின் யாசின் ரிம5 பில்லியன் மேற்குக்கரை நெடுஞ்சாலையை இன்று தொடக்கி வைத்தார்.
அந்த 233 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை சிலாங்கூரில் பந்திங்கில் தொடங்கி பாகான் டத்தோ, தெலோக் இந்தான், லெகிர், சித்தியவான் வழியாக தைப்பிங் சென்றடைகிறது.
நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டதும் தெலோக் இந்தானும் அதன் அருகில் உள்ள நகரங்களும் பெரிய அளவில் மேம்பாடு காணும் என முகைதின் நம்பிக்கை தெரிவித்தார்.
சோழியன் குடிமி சும்மா ஆடாது !!!!!!!!!!!!!!!!!
பொபாஆஆ
நஜிப் சொன்ன அதே அள்ளிவிட்டான் வாக்குறுதியை இப்போ துணைப்பிரதமரும் சொல்லி மக்களை திசை திருப்புகிறான்… மக்களுக்கு செய்ய வேண்டியதை அவ்வப்போது செய்து கொடுப்பவர்களே மக்கள் சேவகன்….
கோலா சிலாங்கூரில் இருந்து சுங்கை பெசார் வரை கடற்கரை நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் குத்தகை முன்னால் மந்திரி பெசார் ஒருவரின் தம்பியின் நிறுவனத்துக்கு கொடுத்து ஏறக்குறைய 7 வருடங்களாக செய்து முடிக்காமால் நாறடித்து விட்டனர் இந்த கையால் ஆகாத அம்னோ தலைவர்கள். இந்த புதிய(?) திட்டம் கபார் பாபா காலத்தில் இருந்து சொல்லப் பட்டு வரும் பொய். இந்த இடைத் தேர்தலில் ஆரம்பித்து எப்படியும் இன்னும் 2 பொது தேர்தல் வருவதற்குள் முழு குத்தகை பணமும் கொடுத்து பகுதி வேலை(!) முடிந்து விடும்!.
இடைத்தேர்தலில், டத்தோ மா-வை தேர்ந்தெடுத்தால் தெலுக் இந்தான் வட்டாரம் மேம்பாடு அடையும் என்று பொய் பிரச்சாரம் செய்து வரும் தே.மு. – யின் பங்காளி கட்சியான ம.இ.க.-வுக்கு ஒரு கேள்வி?. இந்த மேம்பாட்டால் நன்மை அடையப் போவது யார்?.ஒவ்வொரு குத்தகையும் பெறப் போகும் அம்னோ கூட்டுக் களவாணிகள் முதலில் நன்மை பெறுவார்கள். அடுத்து கெரக்கான் கட்சியைச் சார்ந்த முதலைகள் பங்கு போய் விடும். கொஞ்சம் நெஞ்சம் இருக்கும் எலும்புத் துண்டு ம.இ.க. குட்டித் தலைவர்களுக்கு போய் விடும். அங்கு வாழும் இந்தியர்களுக்கு கிடைக்கப் போவது வெறும் வெற்று வாக்குறுதியும் நெத்தியில் மூன்று நாமங்கள் மட்டும்தான். இந்த பொய்யான மேம்பாட்டுத் திட்டங்களை நம்பியா தெலுக் இந்தான் இந்தியர்கள் தே.மு. ஓட்டுப் போட வேண்டும். தெலுக் இந்தான் வட்டார இந்தியர்கள் கடின உழைப்பாளிகள். 99% சதவீத இந்தியர்கள் தங்கள் சொந்த உழைப்பாலே முன்னேறியவர்கள். இவர்களுக்கு நன்மை பயக்காத மேம்பாடு வந்தால் என்ன? போனால் என்ன?. தெலுக் இந்தான் வட்டார இந்தியர்களே, இந்த நெடுஞ்சாலை நீங்கள் தே.மு. ஓட்டுப் போடவில்லை என்றாலும் வரும் ஆனால் நன்மை உங்களுக்கு மட்டும் அல்ல மேற்கு கரையோரப் பகுதியில் அதிகமாக வாழும் மலாய்க்காரர்களே இதன் பெரும் பகுதி நன்மை பயப்பவர்கள்!. உங்கள் உரிமையை காக்க ஜ.செ.க. கட்சியைத்தான் நாம் நம்பி இருக்க வேண்டியுள்ளது. இவர்கள் போடும் கூக்குரலில்தான் ம.இ.க. அம்நோவிடம் பிச்சை வாங்க முடிகின்றது. இதற்க்கு தானைத்தலைவரின் கூப்பாடே போதுமான அத்தாட்சி..
க… காரா… பேசுது பாரு
நாட்டில் நல்லது நடக்கவேண்டும் என்றால் மாதம் ஒரு MP யை கடவுள் அழைத்துக்கொள்ள வேண்டும் ! பலிக்குமா ?
PKR நாட்டை ஆழ்ந்தாள் எந்த தமிழனுக்கும் ஆதாயம் கிடைக்க போவதில்லை ,,இது நாள் வரையிலும் இந்த நாட்டை முன்னேற்றியது BN தான் ,முயிடின் கூட கிடையாது ,இவர் திறமை இல்லாத துணை பிரதமர் …PKR ராய் நம்பி குழியிலே விழுவதை வீட BN நம்பி எலும்பு துண்டுக்கு ஆசை பட்டாலும் ஓரளவாது கிடைக்கும் ,,
கெட்டவனாக இருந்தாலும் நாட்டுக்கு நல்லது செய்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ,,BN ன்னுக்கு எனது முழு ஆதரவு
கெட்டவன் எப்படி நல்லதைச் செய்வான்?. “கெட்டவன்” செய்வது “நன்மை” என்னும் ஒரு விளம்பர மாயையில் 2005-ம் ஆண்டு வரை அனைவரையும் மயக்கி வைத்திருந்தது தே.மு. என்று இணையம் நம்மை தொடர்பு படுத்தியதோ அன்றே தே.மு. – யின் மாயை மறைந்து நாம் அறியாமையில் இருந்து நீங்கி அறிவுப் பூர்வமாக சிந்திக்க ஆரம்பித்தோம். இன்னும் அந்த அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் ம.இ.க. ஐ.பி.எப், பி.பி.பி போன்ற கட்சிக் காரர்கள்தான் கயவனை நண்பன் என்று நம்பி பாழும் கிணற்றில் விழுவார்கள். இவர்கள் இன்னும் தே.மு. -யின் மாயையில் இருந்து மீளவே இல்லை போலும். கெட்டவன் செய்யும் இன்னொரு நன்மையைக் கேளுங்கள். மெட்ரிகுலேசன் சென்ற இந்திய மாணவிகளை ஒவ்வொரு வார வெள்ளிக் கிழமையும் ‘Baju Kurung’ போட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து உள்ளது ஒரு மெட்ரிகுலேசன் கல்லூரி?. இதுதான் “கெட்டவன்” செய்யும் “நன்மை”யாம்! இதை தவிர்க்க இயலேல் நாளை நம் ஆண் பிள்ளைகளையும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தலையில் குல்லா போட வைப்பார் இந்த முல்லாக்கள். இது தேவைதான் என்றால் தே.மு. ஓட்டுப் போட்டு முல்லாக்களாக மாறி விடுங்கள். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
இன்னுமா புத்தி வரவில்லை?எவ்வளவு காலத்திற்குத்தான் இப்படியே வாழப்போகிறீர்கள்?பிச்சை எடுப்பதைவிட சாவது மேல்.
மலேசியாவில் எதிர் கட்சி இறுகும் வரைக்கு நமக்கு தான் லாபம் .