ஐ.நா விசாரணையில் துணிந்து சாட்சியமளிக்க வேண்டும்: விநாயகமூர்த்தி எம்.பி

vinayakamurthi_mp_001வட கிழக்கு மாகாணங்களில் படையினரின் தேவைகளுக்காக நிலச் சுவீகரிப்பு உச்ச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மூலம் அல்லது இந்திய அரசாங்கத்தின் மூலம் இப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்ப முடியாது. ஐ.நா சபை ஊடாக அல்லது சர்வதேசத்தின் ஊடாக மட்டுமே தீர்க்க முடியும் என விநாயகமூர்த்தி எம்.பி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிவட கிழக்கு மாகாணங்களில் படையினரின் தேவைகளுக்காக நிலச் சுவீகரிப்பு உச்ச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மூலம் அல்லது இந்திய அரசாங்கத்தின் மூலம் இப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்ப முடியாது. ஐ.நா சபை ஊடாக அல்லது சர்வதேசத்தின் ஊடாக மட்டுமே தீர்க்க முடியும் என விநாயகமூர்த்தி எம்.பி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்பும், சிங்கள குடியேற்றமும் உச்ச அளவில் நடைபெற்று வரும் நிலையில் தமிழர்கள் இங்கே வாழ்ந்தார்களா? என எதிர்காலத்தில் கேட்கும் அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வலிகாமம் வடக்கில், சம்பூரில் என தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. மக்கள் இப் பிரச்சினையை யாருக்கு சொல்வதென்று தெரியாமல் நிற்கின்றார்கள்.

மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டு அதற்குப் பரிகாரம் செய்யும் அளவிற்கு யாரும் இல்லை. புலிகள் இருந்தார்கள் என்ற காரணத்தை காட்டியே இவ்வாறான நில ஆக்கிரமப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேலும் வலி,வடக்கு நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இடைக் கால உத்தரவும் வழக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அதற்குப் பின்னாலும் நில ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதும் கூட தீர்வு கிடைக்காத ஒரு வழிமுறையாகவே இருக்கின்றது. எனவே நான் தெளிவாக நம்புகின்றேன்.

இந்தப் பிரச்சினையை இலங்கை அரசாங்கமோ, அல்லது இந்தியாவின் புதிய பிரதமர் மோடியோ தீர்த்து வைப்பார் என நான் நம்பவில்லை.

மேலும் தமிழர்களுடைய நலன்களுக்காக மோடி இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பார் என்றும் நான் நம்பவில்லை. இந்நிலையில் சர்வதேசத்தின் அல்லது ஐ.நாசபையின் ஊடாக மட்டுமே இந்தப் பிரச்சினையினை தீர்த்துக் கொள்ள முடியும்.

இதேபோன்று கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்தபோது நான் கேட்டேன், படையினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களை எப்போது விடுவீர்கள் என்று.

அதற்கு அவர், அவ்வாறு விடுவிக்க முடியாது என கூறி என்னை உட்காரச் சொல்லிவிட்டார். எனவே இதுதான் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே நான் நம்புறேன் இந்தப் பிரச்சினை சர்வதேசத்தினால் அல்லது ஐ.நாசபையனால் மட்டுமே தீர்த்துக் கொள்ள முடியும்.

இதேபோல் கடந்த ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்கள் விசாரணைகளை ஆரம்பிக்கவிருக்கின்றார்கள்.

எனவே அதில் தமிழ் மக்கள் அது தாயகத்தில் இருக்கும் தமிழர்களாகட்டும், புலம்பெயர் தமிழர்களாகட்டும், துணிந்து சாட்சியம் வழங்கவேண்டும். நாம் தமிழர்களாக இருப்பதற்கு சாட்சியமளித்தே ஆகவேண்டும். என்றார்.

TAGS: