சுல்தான்கள் அரசாங்க விவகாரங்களில் தலையிடுவதைக் கடுமையாகச் சாடி வந்த முன்னாள் பிரதமர் மகாதீர், சுல்தான்கள் முழு அதிகாரத்தோடு ஆட்சி புரிந்த காலத்தில் பெருமளவிலான நிலங்களை அவர்கள் அந்நியர்களுக்கு கொடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சைக்குள்ளான ஜோகூர் மசோதாவைப் பற்றி இதற்கு முன்னர் கருத்துரைத்த மகாதீர் அந்த மசோதாவில் அந்நியர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் எவரையும் குறிப்பிட்டு கூறாவிட்டாலும், அவர் குறிப்பிட்ட அந்நியர்கள் சிங்கப்பூரர்கள்தான் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரர்கள் பெருமளவில் நிலங்களையும் சொத்துகளையும் ஜோகூரில் வைத்துள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
“அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியரசருக்கு செயலாட்சிதுறை அதிகாரம் கிடையாது. ஆகவே, அவர் நாட்டின் நிருவாகத்தில் தம்மை உட்படுத்திக்கொள்ள முடியாது.
“இது தேவை என்று கருதப்பட்டது ஏனென்றால் கடந்த காலத்தில் மலாய் மாநிலங்களை ஆண்டவர்கள் முழு அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். மக்கள் அரசியலில் ஈடுபடுவதிலிருந்து தடைசெய்யப்பட்டிருந்தனர்.
“இதன் விளைவாக பெருமளவிலான நிலங்கள் அந்நிய நாட்டினருக்கு கொடுக்கப்பட்டது. வாணிப சலுகைகள் அந்நியர்களுக்கு கொடுக்கப்பட்டது. இறுதியில், சுதந்திரமும் ஒப்பந்தப்படி பிரிட்டீஷ்சாரிடம் சூரியனும் சந்திரனும் இருக்கும் காலம் வரையில் தாரைவார்க்கப்பட்டது”, என்று மகாதீர் இன்று அவருடைய வலைதளத்தில் எழுதியுள்ளார்.
மலேயன் யூனியன் உருவாக்கப்படுவதற்காக மலாய் ஆட்சியாளர்கள் பிரிட்டீஸ் ஆட்சிப்பொறுப்பாளர் ஹெரோல்ட் மேக்மைக்கலின் கோரிக்கைக்கு பணிந்து அவர்களுடைய மாநிலங்களை பிரிட்டீஷ்சாரிடம் ஒப்படைத்ததையும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ராஜாக்களும் மகாராஜாக்களும் இந்தோனேசியாவில் சுல்தான்களும் அவர்களுடைய் அரியணைகளிலிருந்து இறக்கப்பட்ட காலத்தில் இது இங்கு நடந்துள்ளது என்பதை மகாதீர் உண்மை என்று ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும், அவர்களுடைய அதிகாரங்கள் அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பெடரல் அரசமைப்புச் சட்டத்தையும் மக்களையும் தற்காப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்றாரவர்.
“குறிப்பாக பிரதம மந்திரி உறுதியாக இருப்பதோடு பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அல்லது பணிவு ஆகியவற்றால் ஆட்கொள்ளப்பட்டுவிடக்கூடாது”, என்று மகாதீர் மேலும் கூறினார்.
ஆட்சியாளர்களுக்கு தாராளமான பென்சன் வழங்கப்படுகிறது. ஆகவே, அவர்கள் வாணிபத்தில் ஈடுபடக்கூடாது ஏனென்றால் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு மறுப்பு கூற சிரமப்படுவர் என்றும் அவர் கூறினார்.
“பழிபாவத்துக்கு அஞ்சாத வணிகர்கள் அவர்களுடைய காரியத்தைச் சாதிப்பதற்காக சுல்தான்களை பயன்படுத்திக்கொள்வதோடு சட்டம் மற்றும் கொள்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்வர்”, என்று மகாதீர் மேலும் கூறினார்.
இந்த ஒரு விசயத்தில் மட்டும் நான் உன்னை ஏற்றுகொள்கிறேன் அடமானம் மலேசியா வைத்து சகல சல்லாபங்களும் நடைபெறும் அப்புறம் எவளாவது ஒரு உலக அழகி கையில் மலேசியா அடமானம் வைக்கப்படும் என்பதே உண்மை
முன்னாள் பிரதமர் அவர்களே,சுல்தான்கள் வேண்டுமா,வேண்டாமா
என்ன சொல்ல வருகிறீர்.
சுல்தான்கள் அதிகாரம் போனபோது நிலம் ,பணம் எல்லாம் என்னுடன் வந்து விட்டது ….US40 மில்லியன் ஆஸ்திரியா வங்கிகளில்
அட சுல்தான்களுக்கு எல்லா உரிமையும் கொடுத்துடங்கடா. அப்பதான் அம்னோவோட கொட்டம் அடங்கும். மந்திரி பெசாரு அவர்கள் கையை நக்கி நடுங்க, நம்பெல்லாம் நல்லா குளிர் காயலாம்.
இதனால் ஐயாவுக்கு இப்பொழுது என்னதான் பிரச்சனை?
துன், அருமையான கட்டுரை வாழ்த்துக்கள், நீங்கள் இன்னும் பல காலம் வாழ பிரார்த்திகிறேன்.
இரு கொள்ளையர்களில் ……யார் …… நல்லவர் ???????????
சரி யா சொன்னிங்க செல்லம்
சுல்டன்களை பற்றி மகாதிர் விமர்சிக்காலாம் , ஆனால் எதிர் கட்சியினர் ஒன்று கூறினால் உடனே பொத்துக்கொண்டு வந்து விடும், போலிஸ், அம்னோ எல்லாம்.இந்த மகாதிர் சுல்டங்கள் தேவை இல்லை என்று கூற திராணி உண்டா ?.மலாய் இன வெறியை துண்டி மத வெறியையும் துண்டி விட்டு ஆட்சியை அம்னோவின் கையிக்குள் வைத்துகொண்டு இந்த நாட்டையே கொள்ளை அடிப்பதில் வல்லவர்கள் இந்த அம்னோ தலைவர்கள்.