இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை அழைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
அரசாங்க தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன.
இலங்கையின் நல்லிணக்கத்துக்காக போர் முடிவடைந்து கடந்த ஐந்து வருடங்களாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே தமது அலுவர்கள் சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச விசாரணையின் மூலம் இலங்கையின் நல்லிணக்கத்துக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக, இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விசாரணைக் குழு தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.