விசாரணைக்கு சம்மதிக்க வைக்க ஐ.நா. பிரதிநிதி ஒருவர் இலங்கை வருவார்?

BanKi-moon_akசர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க கோரி, இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்காக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு மறுத்து வருகின்ற அதேநேரம், அந்த விடயத்தை பாராளுமன்றத்திற்கும் கொண்டு செல்கிறது.

இந்த நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த பிரதிநிதி அனுப்பி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கத்தை சம்மதிக்க வைப்பதற்காக, அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது.

எனினும் இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

TAGS: