மலேசிய அருகே வந்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 66 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவில் இருந்து சட்டவிரோதமாக மலேசிய செல்வதற்காக அகதி படகு ஒன்றில் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 97 பேர் சென்றுள்ளனர்.
இந்த படகு மலேசிய கடற்கரையின் அருகே வந்து கொண்டிருந்த போது சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் எதிர்பாரதவிதமாக கடலில் மூழ்கியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், இதுவரை 31 பேரின் உயிரை மீட்டு காப்பாற்றியுள்ளனர்.
மேலும் இதில் பயணித்த 66 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.எனினும் மீட்பு குழுவினர் தொடர்ந்து தங்களது பணியில் தீவிரமாய் செயல்பட்டு வருகின்றனர்.