தாலிபான்களை இலங்கையில் ஊக்குவிக்க அமெரிக்கா முனைவதாக ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், முன்னதாக தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது.
இது பின்னர் அமெரிக்காவுக்கே ஆபத்தாக அமைந்தது. இதேபோன்று தற்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் மிக்செய்ல் சிசன் இலங்கையில் தாலிபான்களை ஊக்குவித்து வருகிறார்.
இது இலங்கைக்கு மாத்திரம் அல்ல, முழு உலகத்துக்கும் ஆபத்தாக அமையப் போகிறது என்று ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் செய்த அதே தவறையே அமெரிக்கா, அளுத்கமை விடயத்தில் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
அளுத்கமையில் உள்ள முஸ்லிம் குழுக்களை கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா ஊக்குவிக்க முனைகிறது.
இந்தநிலையில் இலங்கையின் படையினர் அளுத்கமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை ஒன்றுக்கூட அனுமதித்தனர்.
எனினும் அங்கு சிங்களவர்கள் பேரணியை நடத்த அனுமதிக்கவில்லை என்று ரணவக்க குற்றம் சுமத்தினார்.