கிள்ளான் பள்ளத்தாக்கிலும் புத்ராஜெயாவிலும் காற்றின் தரம் ‘ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல’

putraகிள்ளான் பள்ளத்தாக்கிலும் புத்ராஜெயாவிலும் பல  இடங்களில்  காற்றின்  தரம்  ‘ஆரோக்கியத்துக்குக்  கெடுதல்’  செய்யும்  அளவில் பதிவாகியுள்ளது.

புத்ரா ஜெயாவில்,  காலை  9 மணிக்கு  காற்றின் தரக்  குறியீடு 112-ஆக இருந்தது  எனச்  சுற்றுச்சூழல்  துறை வலைத்தளம்  கூறிற்று.

பந்திங்  அதற்கு  அடுத்த  நிலையில்  இருந்தது. அங்குக்  காற்றுத்  தரக் குறியீடு  108. கிள்ளானில் 107,   செராசிலும்  ஷா ஆலமிலும் 106,  பத்து  மூடாவிலும்  பெட்டாலிங்  ஜெயாவிலும் 103.

காற்றின்  தரக்  குறியீடு  100-ஐத்  தாண்டுவது  உடல்நலத்துக்கு  உகந்ததல்ல  எனக்  கருதப்படுகிறது.