உயர் போலீஸ் அதிகாரியின் பாலியல் லீலைகள்: ஆதாரம் காண்பிக்க மைவாட்ச் தயார்

sriபோலீஸ்  உயர்  அதிகாரி  ஒருவரின்  பாலியல்  லீலைகளைக்  காண்பிக்கும்  நிழற்படங்கள்  தன்னிடம்  இருப்பதாக  மைவாட்ச்  அமைப்பு  கூறியுள்ளது.

அவ்வமைப்பின்  தலைவர்  ஆர். ஸ்ரீ சஞ்சீவன்  அந்த  அதிகாரியின்  பெயரைத்  தெரிவிக்க  மறுத்தார். ஆனால், அந்தப் படங்களை  அம்பலப்படுத்த  அவர்  ஆயத்தமாக  உள்ளார்.

அதற்குமுன்  பிரதமரிடமிருந்தும் உள்துறை  அமைச்சரிடமிருந்தும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்ற  உத்தரவாதத்தை  அவர்  எதிர்பார்க்கிறார்.

“அந்த  அதிகாரி  உடனடியாக  இடைநீக்கம்  செய்யப்பட்டு  முழு  விசாரணை  மேற்கொள்ளப்படும்  என்று  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியும்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கும்  உத்தரவாதம்  அளிக்க  வேண்டும்”, என்று  சஞ்சீவன்  கூறினார்..

மைவாட்ச்  இதற்குமுன்னரும்  பலவற்றை  அம்பலப்படுத்தியுள்ளது.  ஆனால்,  அவையெல்லாம்  மூடி  மறைக்கப்பட்டு  விட்டதாக  அவர்  சொன்னார்.