தமிழ் கற்றுக்கொண்ட 1122 இராணுவத்தினர் இனி தமிழ் பெண்களை கலியாணம் கட்டுவார்கள்!

army_vavuniya_003தமிழ் மொழிப்பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 1122 இராணுவ அதிகாரிகளைக் கொண்ட மற்றுமொரு குழுவினருக்கு யாழ் பாதுகாப்புத் தலைமை அலுவலகத்தில் அண்மையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேற்படி தமிழ் மொழிப் பயிற்சிநெறியை 12 அதிகாரிகளும் வேறுபல பதவிகளையும் சேர்ந்த 1110 பேர்களும் பூர்த்தி செய்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்புப்படை தலைமை அலுவலக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார். இவ்வாறு தமிழ் மொழிப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்கள் பலர், இளையோர்களாக உள்ளார்கள். அத்தோடு இவர்களின் 90 சதவீதமானவர்கள் திருமணம் ஆகாத இளைஞர்கள் ஆவர். இவர்களை ஒன்றும் எதேட்சையாக இராணுவ உயர் அதிகாரிகள் தேர்ந்து எடுக்கவில்லை.

இவர்களை இராணுவத் தலைமையகம், மிகவும் சாதூரியமாகவே தேர்ந்து எடுத்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. இலங்கை விமானப்படை மற்றும் இராணுவத்தினரையே இவ்வாறு தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது நடந்த கழியாட்ட விழாவில் பல இராணுவத்தினர் மதுபோதையில் மிதந்துள்ளார்கள். பின்னர் இரவு இவர்கள் புறப்பட்டு தத்தமது இடங்களுக்குச் செல்ல, ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்கள். இவ்வாறு ஆட்டோவில் சென்ற இராணுவத்தினர், இனி தாம் தமிழ் பெண்களை யாழ்ப்பாணத்தில் மணம் முடிக்கலாம் என்றும், தமக்கு நன்றாக தமிழ் தெரியும் எனவும் ஆட்டோ சாரதியிடம் பேசியுள்ளார்கள்.

பெரும்பாலும் தென்னிலங்கையை விட தாம் யாழ்ப்பாணத்தில் வசிக்கவே பெரிதும் விரும்புவதாகவும், இங்கே தாம் குடியேற விரும்பினால் இலங்கை இராணுவத்தால் தமக்கு இலவச காணிகள் கிடைக்கும் என்றும் அவர்கள் பேசியுள்ளார்கள் என ஆட்டோ சாரதிகள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

TAGS: