அமைச்சர் மா இந்து அறப்பணி வாரியத்தையும் கவனித்துக் கொள்வார்

 

Teluk Intan Mahபிரதமர்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கெராக்கான் தலைவர் மா சியு கியோங் இந்து அறப்பணி வாரியத்தை கண்காணிக்கும் பொறுப்பையும் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, இந்த வாரியம் இந்து சமூகம் சம்பந்தப்பட்ட நிலம், இடுகாட்டு நிலம், சொத்து மற்றும் நிதி ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறது.

மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பொறுப்புகளில் இதுவும் அடங்கும் என்று சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால், தமது பதவிக்கான பொறுப்புகள் குறித்து தாம் இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், எதிர்வரும் திங்கள்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தவிருப்பதாக மா தொடர்பு கொண்ட போது கூறினார்.