மைதுகுரி:ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், ‘போகோ ஹராம்’ பயங்கரவாதிகளால், கடந்த மாதம் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர், 60 பேர், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளனர்.தாம்போவா என்ற இடத்திலிருந்து, கடந்த மாதம் 22ல், கடத்திச் செல்லப்பட்ட இந்த பெண்கள், பயங்கரவாதிகள், ராணுவத்தினருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தப்பி ஓடி வந்து விட்டனர்.எனினும், மே 15ல், சிபோக் என்ற நகரில், கிறிஸ்தவ உண்டு உறைவிட பள்ளியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட, 219 சிறுமியர் கதி தெரியவில்லை; அவர்கள் இன்னும் பயங்கரவாதிகள் பிடியில் தான் உள்ளதாக கருதப்படுகிறது.
பயன்கரவாதிங்கனா பொம்பளைங்கள கடத்தரவன்களா? நான் கூட எதோ வீர போர் நடத்தரவங்கன்னு நினைச்சன்!