ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் காதலி என்று கூறப்படும் எஸ்டோனிய மாடல் அழகி ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் நம்புகின்றனர்.
ரெஜினா சூசலு என்ற அப்பெண் முதலில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றுதான் கருதப்பட்டது.
ஆனால், அவரது உடலில் “சந்தேகத்துக்குரிய” காயங்கள் காணப்பட்டதை அடுத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தீர்மானத்துக்கு போலீசார் வந்தனர்.
அவரது உடல் பூலாவ் ராவா கடல்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக த ஸ்டார் கூறியது. விசாரணைக்காக ஆறு சந்தேகப்பேர்வழிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போச்சி போ ….இன்னொரு அழகி மலேசியாவில் ஹபிஸ் !!
இனி காலி லா .. போலிஸ் சம்பளம் ஆல் வேஸ்ட் ஆகேன் !?
அன்று மங்கோலிய மாடல் அழகி C4 வெடிவைத்து கொலை !!!
இன்று ஸ்டோனிய மாடல் அழகி நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை !!!
அடுத்து எந்த நாட்டு மாடல் அழகியை எப்படி கொலை செய்ய போகிறார்களோ ???
அரச குடும்பத்தைச் சார்ந்தவர் என்றால்? .அங்கு அழகிரி ஒன்னு இருக்கின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம்நாட்டு போலீசுக்கும் மட்டும் தெரியாது!. ஜோஹூரை பணம் கொடுத்து 1/3 பகுதியை சீனர்கள் வாங்கி விட்டனர். மீதம் இருக்கும் ஒரு பகுதியில் மாநில அரச உறுப்பினர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். விடிஞ்ச மாதிரிதான்.