பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பக்கத்தான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அளித்து வரும் அழுத்தம் காரணமாக ஹரிராயா கொண்டாட்டங்களுக்குப் பின்னர் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை மாற்றுவதற்கு பிகேஆர் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது.
நேற்றிரவு, பிகேஆர் நடப்பியல் தலைவர் அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் கட்சி தலைவர்களை சந்தித்து அவரது துணைவியாரும் கட்சி தலைவருமான டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக முன்மொழிந்தாக தெரிய வந்துள்ளது.
கட்சி காலிட் இப்ராகிம்மை அகற்றுவதற்கு முடிவு செய்து விட்டதாக அன்வாரை மேற்கோள் காட்டி சீனமொழி நாளிதழ் சைனா பிரஸ் கூறுகிறது.
அன்வார் கட்சி தலைவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் கூறிக்கொள்கின்றன.
வாழ்க , வளமுடன் !
சரிவரவில்லை என்றால் மாற்றம் தேவையாகிறது ! மாற்றத்துக்கு மறு பெயர் சதியா ? என்ன ஒரு கேவலான சிந்தனை !
இந்த மாற்றம் தேவையே. இந்தியர்களைப் பொறுத்தவரை கணபதி ராவ் வந்த பிறகு பல காரியங்கள் தடைப்பட்டு விட்டன. இதற்கு மந்திரி பெசாரும் ஒரு காரணம். நமக்கு ஆதாயம் இல்லை என்றால் நாம் ஏன் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்?
தமிழர் நந்தா சரியாகச் சொன்னீர்.இதை ஏன் ஒரு மாற்றமாக பார்க்கக்கூடாது? ஆசிரியர் குழுவிற்கு ஒரு வேண்டுகோள். தலைப்பினை மாற்றுங்கள்! கட்சிக்குள்ளே கூடி ஒரு ஜனநாயக முடிவெடுத்தால் அதை எப்படி நீங்கள் “சதி” என தலைப்பிட்டு எழுதலாம்? ( குறிப்பு) நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.
மாற்றம் என்பது அரசியலில் சகஜமே. இருப்பினும், மாற்றத்துக்கான சரியான காரணத்தை செலாங்கூர் மக்களுக்கு தெரிவித்தே ஆகவேண்டும்.. பொதுவாக, மக்களின் நலனைக் கருதியே மாற்றம் செய்யப்பட்டது என்று அரசியல் சார்பு காரணங்களை மக்கள் புறக்கணிப்பர். அத்துடன், சுயநல நோக்கத்தின்பால் இம்மாற்றம் கொண்டுவந்துள்ளதாகவும் கருதப்படும். இதனால், மக்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி பக்காத்தான் மீது அதிருப்தி உருவாகவும் வழிவகுக்கும்..
காலிட்டை மாற்றுவது தவறு இல்லை என்பது என் கருத்து. நாம் இதில் கருத்து ஒவ்வாமைக் கொண்டிருப்பது இயல்பு. இவர் தன கடந்த காலத்தை மறக்கமுடியாமல் ஒரு corporateவாதியாகவே செயல் படுகிறாரே அன்றி சிறந்த மக்கள் அணுக்கம் கொண்ட அரசியல்வாதியாக செயல்படவில்லை. குழிகள் அதிகம் கொண்ட சாலைகள், குப்பைகள் வழிந்த குப்பைத் தொட்டிகள் , மக்களைக் காண விரும்பாத தன்மைகள் கொண்டு, கஜானாவை நிரைப்புவது மட்டும் ஓர் அரசியல் தலைவரின் திறமையாக இருக்கக்கூடாது. உண்மையோ, பொய்யோ, இவரது சில செயல்கள் இவரை umnobகு வேண்டியவர்போல் காண்பிக்கிறது. மாநில அரசியல், மத சிக்கல்களில் துணிந்து முடிவு எடுக்க எண்ணம்/துணிவு இன்றி வாயில்லா பூச்சிபோல் காணபடுவது umnobகு சாதகமான அரசியல் நிலையை உண்டு பண்ணுகிறது. வான் அசிசாவும் ஒரு வாயில்லா பூச்சியே. அவர் MPயாக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார்?! அன்வாரின் மனைவி என்பது மட்டும் அவர் கொண்ட ஒரே தனி சிறப்பு..!! அன்வார் உள்ளே போக நேர்ந்தால், எப்பொழுதும் கையுறைகளுடன் எப்படி MB பதவியை திறம்பட நிர்வகிப்பார் என்பது…?! இவரது கணவருக்கும் மகள் நூருக்கும் இருக்கும் திறமையில் கால்பகுதி கூட இல்லாதவர். அன்வார் உள்ளே இருக்கும் நிலை ஏற்பட்டால் மேலும் கண்டிப்பாக அதிகரிக்கக்கூடும் umnobன் அரசியல், இன, மத தூபங்களை எப்படி சமாளிப்பார்? ஏதும் மீள முடியா பெரும் தவறினை செய்து பாக்காத்தான் GE14ல் சிலாங்கூரை கோட்டை விடாமல் இருந்தால் சரி. ராபிசி போன்ற ஞானம், திறமை, பேச்சாற்றல், துணிவு கொண்டவர்கள் அதிகம் தேவை. PKRல் Team A , Team B வேலைகள் தன்னழிவுக்கு தோண்டும் குழிகள். தலைவர்கள் சுய நலம் நீக்கி, ego தவிர்த்து மக்கள் நலன் பேண வேண்டும். அது போன்ற தலைவர்கள் தென்படுவது என்னமோ எங்கும் அரிதாக உள்ளது.
இந்த மாற்றம் எதிர் காலத்தில் இந்தியர்களுக்கும் விடி வெள்ளியாக அமயாட்டும்
1. சிலாங்கூரின் வளர்ச்சிக்கு காலிட் முட்டுக் கட்டையாக இருக்கிறார்.
2. சிலாங்கூர் அழுக்கடைந்த மாநிலமாக மாறிவிட்டது. அதிலும் ‘அழகிய’ ஷா ஆலாம்’ மிக மிக அழுக்கடைந்து காணப்படுகிறது.3
சாலைகள் முறையாக செப்பனிடப்படுவது இல்லை. 4. இரவில் பல இடங்களில் தெரு விளக்குகளில் ஒளியில்லை.
இந்தக் குறைகளை கடந்த 5 ஆண்டுகளாக முன்வைத்தும் கூட ரொம்பவும் ‘மெத்தனமாக’ செயல்படுகிறார், காலிட். அவருடன் அமர்ந்து உணவு அருந்தலாம். அந்த அளவுக்கு ‘நல்ல மனிதர்’ அவர். ஆனால் சிறந்த மாநிலத் தலைவர் அல்ல அவர். .5. அண்மைய காலமாக காலிட் அம்னோவுடன் கைகோர்த்து வருகிறார். நிலைமை இப்படியே போனால் அடுத்த பொதுத் தேர்தலில் அல்ல எப்போது ‘அவசர’ தேர்தல் வந்தாலும் சிலாங்கூர் அம்னோவுக்குப் போவது திண்ணம். எனவே இதைத் தடுக்க மாற்றம் அவசியமானதே.. .
முதலில் கணபதி ராவை மாற்ற வேண்டும் . அவனால் இந்தியர்களுக்கு ஒரு காசுக்கும் புண்ணியமில்லை
“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது ,கருடா சௌக்கியமா ?” “இருக்கும் இடத்தில இருந்து இருந்தால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது “என்ற பாட்டுதான் பொருந்தும் போல?
ஒரு மாநில அரசு நிர்வாகம் என்பது முன்பு மாமனும் மச்சானும் அதாவது அமட் ரசாளியும் மகாதீரும் இருந்த காலத்தில் எல்லாம் ஓகே! இப்போ மாநிலம் நடுவண் அரசு …இரண்டும் எதிரும் புதிருமாக அதிலும் அன்வார் என்ற ஆலோசகர் அரசியல் “பசியில்” என்பதால் நல்லா இருக்கும் அரசியல் அரசு அமைப்பை மீண்டும் சீழ் நிலைக்கு கொண்டு போய் விடுவது புத்திசாளிதன்மல்ல ?
நிதானமாக யோசித்தால் மாநில ஆலோசகர் ..இதுவரை தண்ணீர் சிக்கலுக்கு ஒரு வழியும் செய்யவில்லை ?அதுபோலவே பைபிள் , ரோடு , முன்பு BN செய்த பல மாநில கோளாறுகளுக்கு தீர்வு இல்லாமல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காலீட் தவிக்கும் தவிப்புகளை வேடிக்கை மட்டும் பார்த்து இன்று பலி போடும் அரசியல் அநாகரீகம் செம்ம பீரங்கிதான் போங்க ! காஜாங் இடை தேர்தல் .PKR கட்சி தேர்தல் காரணங்களை குழப்பினால் கிடைப்பது மேலும் குப்பைகள்தாம்.
பொதுவாகவே பாகாதான் அரசியல் அதாவது கூட்டணி குறிப்பா PKR ஒரு வேடிக்கை வேட்டையாடி தோப்பு எனலாம். அல்லது வேலி இல்லாக்காடு. அங்கு ஒரே ஒரு பாது காவலர் அன்வார். அதற்குப பேர் “அரசு” 5 மில்லியன் மக்கள்தொகை 15 கும் குறையாத அரசியல் கட்சிகள். ஆயிரக்ககணக்கான கம்பெனிகள் .12 மாவட்டங்கள் . நாடாளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகள் இது போக இன்னும் சொல்ல முடியாத பொறுப்புகள் ??????? எல்லாத்தையும் MB கவனிக்க வேண்டும்.
அன்வார் அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. சுய அஜெண்டாவை காப்பாற்ற இதனால் அவர் எதாவது செய்து மக்களை கச்சோர் செய்து கொண்டே இருக்க வேண்டும். வசதிக்காக அசிசாவோ/ அச்மினோ வந்தாலும் இந்த தொல்லைகள் இல்லாமல் இருக்காது. மாநிலம் மாட்டப போவது திண்ணம்.
ஒரு பேச்சிக்கு எடுத்துகொள்வோம் …DAP யில் அப்பன், பிள்ளை , அண்ணன் தம்பிகள், PKR ல் அப்பன், மனைவி, மகள்,கூட்டாளிகள் ,பாஸ் ல தெரியல ? இதையெல்லாம் கேக்க ஆளே இல்ல? மாற்றம், மாற்றம் இதுக்கு பேரு ஒட்டுண்ணிகள் என்பதால் மக்கள் ரத்தம் கசிய உள்ளுக்குள் கதறுகிறோம் !
காலீட் அவர் ஆட்சியில் எந்த தவறும் செய்யவில்லை என்று இல்லை நடப்பதெல்லாம் அதுவெல்லாம் பழைய BN ரோதனைகள். சரி செய்ய பாக்கிறார் விட மாட்டோம் ! இதுக்கு பேர்தாம் உங்கள் பாசையில் மாற்றமோ? அப்போ மாற்ற நினைத்து மக்களுக்கு சொன்னது?
ஆலோசகர் என்றால் உங்களுக்கு சின்ன பையன்கள் ஆலோசகரா இருந்தால் இப்படிதான் புத்தி கோணல் மாணலா போகும்.
காஜாங் திட்டம் வெட்டி பசங்க குப்பை !!! இப்போது வாரிக்கொள்ள முடியல . MB மேல காட்டம் ! அது ஒரு சப்பிகள் கூட்டம் உங்களை ஏய்க்க பார்க்குது! மேயுங்கள் !! மாடுகள் கொட்டாய்க்கு வருதா என்று பார்ப்போம்.
நடப்பில் உள்ள சிக்கலை தீர்க்க குறிப்பா தண்ணீர் சிக்கலை தீர்க்க உங்கள் வழிதான் என்ன ? அசிசவோ ,அச்மினோ கேட்டுப்பாருங்கள் எதாவது துளி கிடைத்தால் போதும் ,,,தீர்த்து விடுவார்களோ?
MB கும் கனம் மதிப்புமிகு சுல்தானுக்கும் பல பொறுப்பு மிகு வேலைகள் உண்டு. உங்களுக்கு இதை விட்டால் வேற வேலையே இல்லை என்பதால் MB விசியத்தை நோண்ட வேண்டாம். நொண்டி சாக்கு போக்கு வேண்டாம். இதில் பல அரசியல் சித்தாந்தங்கள் மறைத்து கிடக்கு.
எல்லாத்தையும் “அரசியால” பண்ணாம அரசு , மக்கள் நிலையில் சிந்திக்கவும். சுயமா யோசிக்கவும்.
உங்களுக்கு அந்த தனி திறமை உண்டு ஆனால் பக்கத்தில் பாவிகள் வேண்டாம். அப்பாவி மக்களையும் மாற்றம் வேண்டும் என்று உங்களை மாற்ற நினைத்த பாகாதான் உண்மை வாதிகளை மாற்றி விடாதீர்கள்.
இன்னும் என்ன தோழா எத்தனை நாளா போட்டி ,போட்டி என்று 75 அஞ்சிலா மிச்சத்தை பார்ப்பது? நிம்மதியா தூங்க யோசிப்போம். வந்தால் வீடு வராவிட்டால் பாலு. நம்பிக்கையுடன் நடுங்கள் விவேக வியூகத்தை ! எல்லா புகழும் இறைவனுக்கே!! சாலாம் ஹரி ராயா பெரு நாள் நல் வாழ்த்துகள்.
அரசியல் முன்புபோல் இல்லை. வேண்டியவர், வேண்டாதவர் என்கிற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டது. வேண்டியவர் என்றால், அவர் குப்பை என்றாலும் அவருக்கு நிச்சயம் பதவி. வேண்டாதாவர் என்றால், அவர் ‘காமராஜராக’ இருந்தாலும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள், இன்றைய அரசியல் பெருச்சாளிகள். எதிர்வரும் பொதுத்தேர்தலில் பக்காத்தான் பக்காத்தான் கூட்டணிக்கு படு மோசமான விளைவுகள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். PKR மலாய்க்காரர்களின் ஆதரவை கணிசமாக இழக்கக் கூடும். சீனர்களின் ஆதரவு DAP க்கு ஆப்பு. காரணம், மேல்மட்ட தலைவர்கள்,மமதை, தலைக்கனம் கொண்டு அலைகிறார்கள் . PAS ஹுடுத் விஷயத்தில் தனக்கே குழித் தோண்டிக் கொள்கிறது.
பெத்தோல் கென்ஞாதாஆன்(சிங்கம்) ஹாங்,ஓராங் துத்தோப் மாத்தா சோக்கோங்.மெரேகா சுடா மாபோக்,புவாட் பி.ஆர் செடார்.புக்கான் புவாட் காலா தாப்பி ஹம்பீர்2 காலா.வாழ்க நாராயண புகழ்.
போன்ரங்கன் நீ என்ன அரசியல் மேதாவிய??????????
பொன் ரங்கன், நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். சிலாங்கூர் அரசியலில் எங்களுக்குப் பரிச்சயம் இல்லை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே வழி தான். அது சீனர்கள் வழி. நமக்கு, நமது சமுதாயத்திற்கு லாபம் இல்லை என்றால் அவர்களைக் கவிழ்த்து விட வேண்டும். அவ்வளவு தான்! நாம் மலேசியர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நம்மை மடையர்கள் ஆக்கி விடுவார்கள்!
நல்லாதாக போச்சி ,இனி தமிழன் வாழ்வான் ,கணபதி ராவ் ,ஒன்னுதுக்குமே புண்ணியம் இல்லை ,பேரிலேயே ராவ் இருக்கிறது ,நான் தமிழன் என்று சொல்லிக்கொளும் தெலுங்கர்கள் நாட்டில் அதிகம் ,ஜாக்கிரதை
khalid சுடாஹ் ஜாடி அஹலி UMNO லெபிஹ் பைக் க்ஹலிட் DI BUANG PARTI
மெமாஹாமி டூலு சியாப்பா இத்து காலிட்.டீ ஐ.டி.எம்,புக்கான் மெலாயூ அப்பா மாச்சாம் மாசூக்,காலாவ் புக்கான் காலீட்.கீத்தா தா மாவ் போலீடிக்,”சியப்பா சொக்கோங் கீத்தா,கீத்தா சொக்கோங் டீயா”.ஹங் பாஹாம் பாகூஸ்,வாழ்க நாராயண நாமம்.
இதில் என்ன சதித்திட்டம். ஒரு கட்சியின் தேசிய தலைவர் மற்றும் அதன் உயர்மட்டக்குழு ஒரு மாநில மந்திரி புசாரை நீக்க மற்றும் அமர்த்த உள்ள அதிகாரத்தின் படி செயல் படுவது சதித்திட்டமா? அப்படியானால் சொந்த தொகுதியில் அதுவும் கட்சித்தேர்தலில் தோற்பதும், அதற்காக நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று கேட்பதை என்னவென்று சொல்வது. இப்படிப்பட்டவர்கள் பொதுதேர்தலில் தோற்றால் கூட ஆட்சியை வெற்றிப் பெற்றவரிடம் ஒப்படைக்க மறுப்பது போல் அல்லவா இருக்கு.
சிலாங்கூரில் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன என்பது போன்ற அடிப்படை விசயங்களை அறிந்துக் கொள்ளாதவர்கள், மந்திரி புசார் பதவிக்கு யார் தகுதியானவர் வான் அஸிசாவா அஸ்மீனா என்று தர்கம் செய்வதும், அரசியல் ஆருடம் எழுதுவதும் வேடிக்கையாக உள்ளது
.
அஸ்மினோ, அசிசாவோ யார் MB யாக யார் வந்தாலும் சிலாங்கூர் மக்கள் சிக்கல சிக்கலோதான்….நடுவண் நட்டு வெச்ச தண்ணீர் வந்து ஊட்டபோவதில்லை.காஞ்சது காஞ்சதுதுதான் மேஞ்சது மேஞ்சதுதான்.தைப்ப போல காலீட் அண்ணன் பாசுக்கு போவார்! PR படம் சிங்கம் 3 போல மீண்டும் ஒரு கதாநாயகி வில்லனாக…….அன்வார் அங்கிருந்து அள்ளுவார் ” மாற்றம் தானே !மக்கள செஞ்ச போவுது ..சுண்ணாம்பு தடவதான் ஆளு ரெடியாசே ? வேடிக்கை பாப்போம் நம்மால அரசியல் நெய் ………முடியும்.
சதியா? புரியவில்லை . கட்சியீன் தலைமைதுவதிற்கு யாரையும் மற்ற உரிமையுண்டு. பாரிசன் தெரங்கனுவில் மாற்றினால் அது ஜனநாயகம் பாகத்தான் மாற்றினால் சதியா .உங்களைபோன்றுதன் உதுசன் மேலயு சொல்கின்றது
அரசியல் திரை மறைவில் ஏதோ நடக்கிறது, காஜாங் இடைத் தேர்தலுக்குப் பிறகு சிலாங்கூரில் என்னவெல்லமோ நடக்கிறது. இது யாருடைய கபட நாடகம் என்பது விரைவில் தெரிய வரும். இதன் வழி பாக்காத்தான் கட்சி அடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை மிண்டும் கைப்பற்றுமா என்பது இப்பொழுதே கேள்விக்குறியாக அமைந்துவிட்டது.