டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சரவாக்கில் டிஏபி-க்கும் பாஸுக்குமிடையில் மூண்டுள்ள சர்ச்சை குறித்து கருத்துரைக்க மறுத்தார்.
பின்னர் அதன்மீது அறிக்கை வெளியிடுவதாக பினாங்கு முதலமைச்சருமான லிம் கூறினார்.
உடனடியாகக் கருத்துரைக்க மறுப்பது ஏன் என்று வினவியதற்கு, “உங்களுக்கே தெரியும்” என்றார்.
“ஊடகங்கள் சுற்றி இருக்க நான் ஏதாவது சொன்னால் அப்படியே திரித்துக் கூறி விடுவார்கள். அதனால், அறிக்கைக்காக நீங்கள் காத்திருப்பதுதான் நல்லது”, என்றுரைத்தார்.
கிளந்தானில் ஹுடுட் கொண்டுவருவதன் தொடர்பில் பாஸ் புத்ரா ஜெயாவுடன் தொடர்ந்து ஒத்துழைத்தால் சரவாக் டிஏபி பக்காத்தான் ரக்யாட்டிலிருந்து வெளியேறலாம் என மலேசியாகினி நேற்று அறிவித்திருந்தது பற்றித்தான் லிம் இவ்வாறு கூறினார்.
இவனுங்க வண்டவாளம் எல்லாம் இனி ஒன்னு ஒன்னா வெளிவரும்.
உங்களுக்கு மட்டும்தான் பத்திரிகை விளம்பரம் கொடுக்கத் தெரியுமா?? எங்களுக்கும் தெரியுமல்ல என்று காட்டுகிறார்கள் போலும்.
பாஸ் கட்சிகாரர்கள் எப்பொழுதும் புடிச்சமுயலுக்கு மூன்று கால் என்று சாதிக்கும் அறிவு கொலுந்துகால் சொல்லவே வேண்டாம் !!!!!!!!!!!!
அரசியல்,கூட்டு கட்சி (பி.ஆர்),ஒருதலை பட்சமாக முடிவு செய்ய முடியாது.அவர் பினாங்கு முதலமைச்சர்,ஆலோசகர் கிட் சியாங்,லிம் கிட் சியாங்கிடம் தான் வினவவேண்டும்.நாராயண நாராயண.