இராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது.
இந்த உத்தரவினால் பெரும் கவலை அடைந்துள்ளதாக இராக்கிற்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி ஜாக்குலின் பேட்காக் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு சம்பந்தமாக சன்னி ஜிகாதி குழுவான ஐசிஸ் நேரடியாக எவ்வித கருத்தையும் கூறவில்லை.
இந்த உத்தரவு சம்பந்தமாக அரபு நாடுகளில் மக்கள் சமூக வலைத்தளங்களில் ஆத்திரமும் அதிர்ச்சியும் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த உத்தரவை ஐசிஸ் பிறப்பித்ததாகத் தெரியவில்லை என ஐசிஸுடன் தொடர்புடைய சமூக வலைத்தள கணக்குகள் கூறுகின்றன.
பெண்ணுறுப்பை சிதைக்கும் வழக்கம் இராக்கிய சமூகத்தில் பரவலாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணுறுப்பை சிதைக்கும் வழக்கத்தை உலகெங்கிலுமிருந்தும் ஒழிக்க வேண்டும் என லண்டனில் இவ்வாரத்தில் நடந்த மாநாடொன்றில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை பிரபித்தவன் முதலில் அவனை பெற்ற தாய் ,உடன் பிறாபுககால் உற்றார் ,உறவினர் சொந்தபந்தங்கள் யாவருக்கும் இந்த முறையை அரங்கேற்ற வேண்டும் அதன் pn
இந்த உத்தரவை பிரபித்தவன் முதலில் அவனை பெற்ற தாய் ,உடன் பிறாபுககால் உற்றார் ,உறவினர் சொந்தபந்தங்கள் யாவருக்கும் இந்த முறையை அரங்கேற்ற வேண்டும் அதன் பின்அவனுக்கு வலி தெரியும் !!!!!!!
ஈராக்கில் தானே நடக்குது விடுங்கப்பு,மணித நேயமோ,நாராயண நாராயண.