சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை பதவியிலிருந்து அகற்றுவது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பெரும் குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பக்கத்தான் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அந்த எதிரணியை வலுப்படுத்துவதற்கு இன்று (ஆகஸ்ட் 2) உறுதி பூண்டனர்.
மக்களின் ஆதரவால் பக்கத்தான் தோன்றி வளர்ச்சி அடைந்தது. ஆகவே, கூட்டணி உறுப்புக் கட்சிகள் தொடர்ந்து ஒன்றாக இருப்பதற்கு அவை ஆவன செய்யும் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி மற்ரும் டிஎபி தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டனர்,
பக்கத்தானை ஆட்கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகான பங்காளிக் கட்சிகள் கூட்டாகச் செயல்படுவர் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர்,
ஒரு அரசு நியாயமாக நடக்கவேண்டுமாயின் மக்கள் விழிப்பாக திகழவேண்டும்.மக்கள் ஒற்றுமையாக போறாடவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
எப்பயாவது போங்கடா ,தமிழனுஜ்சு ஆப்பு அடிக்காம இருந்தா சரி
Nalla seithi muthalil aadchiyai pidikka paarunggal
புலிக்கு என்னதான் ஆட்டுத்தோலை ஆடையாக போட்டு மூடி மறைத்தாலும் அது அடிக்கடி உறுமுவது அதன் இயல்பு. அதன் உறுமலை மாற்றுவது முடியக்கூடிய காரியமா?!
பாஸ் உறுபினர்களின் உள்நோக்கம் , அதன் கொள்கை இன்னும் மாறுபடவில்லை, மாறுபடாது . காரியம் நடப்பதற்கு கை கோர்த்து நிற்கிறார்கள், நாம்தான் கோவிலில் மஞ்சள் நீர் தெளித்துவிட்ட கடா போல் காத்துக்கொண்டிருக்கிறோம் ?
ஆட்சிய புடிச்ச தமிழன் எல்லாம் எடுபிடிதான் PAS கட்சி இஸ்லாமை ஆதரிக்கும் DAP கிறிஸ்தவர்களை ஆதரிக்கும் PKR சொந்த குடும்பதை ஆதரிக்கும் தமிழன எவனும் ஆதரிக மட்டன் தெரிஞ்ச சரி அவங்க அவங்க குடும்பத்த அதறிங் இந்த நாட்டுல நம்ப நாம தன் உழச்சி சம்பாரிச்சி வளனும் அரசாங்கம் ஒன்னும் நமக்கு (தமிழனுக்கு) உதவ போறதில்ல ………..தமிழா தமிழா தமிழா வாழ்வா சவ நீங்களே நிர்நியுங்க ……………
க.ம.போ. சொன்ன புலியும், ராஜுல்லா சொன்ன கடாவும் உண்மையே. உண்மையை அறியாமல் இந்தியர் அரசியலில் தடம் புரண்டு போய்க் கொண்டிருகின்றோம்.
இந்த உலகத்தில் மதக்கொள்கையை அரசியல் கொள்கையோடு இணைத்து அமைதியான,எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் அரசியலை நடத்தவே முடியாது. மதக்கொள்கைத் திணிப்பு அரசியலில் பாதிப்பைக் கொண்டுவரும்.குறிப்பாக பல்லின மக்கள் பலமதக்கொள்கையுள்ள மக்கள் வாழும் நாடுகளில் உண்மையாகவே பாதகங்களை உறுதியாக உருவாக்கியே தீரும். நல்லாட்சி நடத்த உண்மையிலேயே மனப்பூர்வமாக விரும்பும் அரசியல்வாதிகள் மதக்கொள்கையை “சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று சொல்லத் தைரியம் வேண்டும். நம்முடைய மத உணர்வாக இருந்தாலும்சரி,மதவெறியாக இருந்தாலும்சரி அரசியலுக்குள் கொண்டுவந்து கொடிநாட்ட அனுமதிக்கலாகாது. பல்லின,பலமத மக்கள் வாழும் நாடுகளில் மதத்தை முதன்மைப்படுத்தி ஆளும் ஏதாவது ஒரு நாடாவது அமைதியாக இருக்கிறதா பாருங்கள்?
i வான்ட் சக் திஸ் பாய்ஸ் !!!!!!!!!!!!i
சமயத்தையும் அரசியலையும் பிரித்து ஆள்வது கடினமே. ஆகவே, திறந்த தெளிந்த கொள்கை இல்லையெனில் “குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய கதைதான்”. முதலில், பாஸ் கட்சியில் உள்ள (fanatic/liberal) இரு தரப்பினரும் அரசியல் என்று வரும்போது, இனம், மதம் பாராமல் மக்களின் ஒருமொத்த கொள்கையை முதல் கொள்ளல் வேண்டும். “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால்” ஒன்னும் நடவாது. இது அவ்வளவு சுலபமல்ல. அம்னோவும் அவ்வப்போது குடைந்துகொண்டே இருக்கும். தெளிந்த சிந்தனையுடன் அரசியலை நடத்தினாலொழிய, வேறு வழி இல்லை.
தண்ணீரும் எண்ணெயும் ஒன்றாக இருக்கலாம் , ஆனால் ஒருசேர முடியாது என்பதற்கு இதுவே உதாரணம் ! தமிழனாக பிறந்து , தமிழனாக வளர்ந்து மதமென்ற பிரிவால் மனிதன் தன் இனத்தையே கொச்சை படுத்தும்போது , இனத்தால் ,மொழியால் ,மதத்தால் வேறுபட்ட மலாய்காரர்கள் எப்படி நம்மோடு இருப்பார்கள் ! ( இப்போது உள்ள ஹுடுத் விரும்பிகள் ) . அன்றுவந்ததும் இதே நிலா , இன்றுவந்ததும் அதே நிலா? என்று பாடிக்கொண்டு இருந்தால் – எதிர்காலம் சூனியமாகிவிடும் ! அவன் பார்க்கும் நிலா வேறு , நம் பாட்டி சொன்ன நிலா வேறு!
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.அதாவது ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு,அந்த நட்பிலிருந்து விடுபட முடியாது அளவுக்குக் கேடுகளை உண்டாக்குமாம் என்கிறது குறள் நட்பாராய்தலில்.வாழ்க நாராயண நாமம்.
எண் கணதத்தில் பி=8,ஆர்=2 =10,வியாபார ஸ்தாபனம்,பேங் போன்ற நிருவணத்துக்கு சூட்டின் நன்று,கூட்டனிக்கு வைத்தால் உடைந்து சிதறிவிடும்.வியாபார நிறுவணத்தில் பொருள் வரும் விற்று முடியவேணும்,நிதி நிருவனம் இன் அவுட் ஆகவேண்டும்.1=நிலையானதை குறிக்கும்,0=அழிவதை குறிக்கும்.இருப்பதையும் மறைவதையும் குறிக்கும் தன்மை கொண்டது,நிலையற்றது.வாழ்க நாராயண நாமம்.
ரொம்ப …இருகிறிங்க போல இருக்கு