ஜோகூர் பாருவில், சிங்கப்பூருக்குச் செல்லும் வழியான ஜோகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, குவரண்டின் (CIQ) வளாகத்தில் சாலைக்கட்டணம் உயர்த்தப்பட்டது “சட்டப்படி” செய்யப்பட்ட ஒன்றா என ஜோகூர் எதிரணித் தலைவர் பூ செங் ஹாவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆகஸ்ட் முதல் நாள் சாலைக்கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதற்குமுன், 1984ஆம் ஆண்டு கூட்டரசு சாலைகள் சட்டப்படி அது அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்று அரசு இதழில் வெளியிடப்பட்டதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்”, என டிஏபி சட்டமன்ற உறுப்பினரான பூ கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் கு வக்காலத்து வாங்குறதுக்கு DAP காரனை தவிர மலேசியா வில் வேறயாரும் இல்லை ……..
DAP வோட்டு போடும் நம்பவர்களை சொல்லணும் …….
உண்மை தெரியாமல் யாரும் பேச வேண்டாம். தோல் அதிகரிப்பால் பதிக்கே படுவது நம் தமிழர்களும் சீனர்களும் thaan. சிங்கப்பூர் காரன் அவன் மக்களுக்கு சாலைக்கட்டணம் உயர்த்த இல்லை. நம் மலேசியா நமது மக்களுக்கும் சாலைக்கட்டணம் உயர்த்தியுள்ளது. ஒரு கேவலமனே முடிவு. இறுதியில் நட்டம் நமக்கே. Dap யாவது நமக்கு குரல் கொடுக்குதே. மிக்க நன்றி. BN ஒழிக.
RAJ நீங்கள் சொல்வது சரி. toll கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப் பாதிக்கப்படுவது, சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்பவர்களே. இதனை பெரும்பாலும் நம் நாட்டிலுள்ள எல்லா தொழில்துறைகளையும் மலாய்க்காரர்கள் அபகரித்து விட்டனர். ஒரு சில சில்லறை வாணிபத்தையும் பங்களாதேஷ் காரர்களுக்கு அர்ப்பணம் ஆகிவிட்டது .[அண்மையில் நஜிப் பங்களாதேஷ் சென்று அங்குள்ள பிரதமர் ஹசினாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்.]ஆக, மலாய்க்காரர் அல்லாத பெரும்பாலோர் சிங்கப்பூர் வேலைகளை நாட வேண்டியதாயிய்று. இதற்கும் ‘ஆப்பு’ வைக்க துணிந்த விட்டது இந்த இனவெறிப் பிடித்த அரசு.