காசா சண்டை தொடர்பில் இஸ்ரேலுடன் வர்த்தகம் செய்யும் சீனா, ஜப்பான், அமெரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுடன் உள்ள வர்த்தகத் தொடர்புகளை மலேசியா மறுபரிசீலனை செய்ய விருக்கிறது.
இஸ்ரேலைத் தண்டிக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என அனைத்துல வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் கூறினார் என உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தூதரக உறவையும் நிருத்திகொள்ளுங்கள்,மக்களை ஏய்கும் செயலே,சமாதானப்படுத்தும் நோக்கே,நாராயண நாராயண.
இதற்குப் பதிலா ராணுவ வீரர்களை அனுப்பினால் ஏதோ கொஞ்சம் தியாகம் செய்த மாதிரி இருக்கும். அவர்களும் வேலை இல்லாப் பட்டதாரிகள் தானே!
இந்த முடிவை ஏன் இலங்கை மீது எடுக்கவில்லை? இன பாகுபாடுதானே அதற்கு காரணம்.பாலஸ்தீனத்திலாவது உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களுக்கும் செஞ்சுலுவை சங்கத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டது.ஆனால் இலங்கையில் அணைத்து ஊடகங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டு அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்களே. அப்பொழுது முஸ்லீம்களை அதிகமாக கொண்ட இந்த பி.என்.அரசாங்கம் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை? இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியா பாலஸ்தீனர்களின் பிரச்சனையில் அனைத்துலக அரங்கில் குரல் கொடுத்ததே ! இதுதான் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள வேறுபாடு.மனித நேயம் என்பது மதத்திற்கும் இனத்திற்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.”யாதும் ஊரே.யாவரும் கேளீர் ” என்பது எங்கள் தமிழனத்தின் தாரக மந்திரம்.