டிஏபி, இளம் மலாய்ப் பெண்களைப் “பயன்படுத்தி” மலாய்க்காரர்களுக்கு வலை விரிக்கிறது என்றும் மலாய் இளைஞர்கள் அந்த வலையில் விழுந்து விடக் கூடாது என்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இர்மோஹிசாம் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
மலாய்க்காரர் ஆதரவுக்கு பக்கத்தான் பங்காளிகளான பாஸ் மற்றும் பிகேஆரையே என்றென்றும் நம்பியிருக்க முடியாது என்பதை டிஏபி உணர்ந்திருக்கிறது.
“மலாய்க்காரர் ஆதரவைத் தேடி அலையும் டிஏபி, மலாய் இளைஞர்களை எளிதில் கவர முடியும் என்பதை அறிந்து இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது”, என்றாரவர்.
டிஏபி காட்சிக்கு வைக்கும் இளம் மலாய்ப் பெண்களைப் பார்த்து மலாய் இளைஞர்கள் மதி மயங்கிடக் கூடாது என்றவர் கேட்டுக்கொண்டார்.
ஒரே ஒரு மலாய்ப் பெண்ணுக்கு ‘ சீட்’ கொடுத்ததற்கே இப்படி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என அலறுகிரீரே! அடுத்த பொதுத்தேர்தர்தலில் நிறைய மலாய்க்காரர்களுக்கு ‘சீட்’ கொடுக்கப்படும். ஆக, முடிந்தால் இப்பொழுதே நீங்களும் டி.எ.பி.யில் நுழைந்துவிடுங்கள். ‘லேட்’ பண்ணினால் ‘சீட்’ கிடையாது. இப்போதே சில இடங்களில் குடுமிப் பிடி சண்டை ஆரம்பமாகிவிட்டது.
அம்னோவின் தந்திரத்தில் மலாய்க்காரர்கள் ஏமாந்து போகலாமோ?.
DAP மலாய்காரி நாம தமிழன பார்த்து பறைய என்று சொல்லுற இன்னும் பல பேரு வந்த இன்னும் தமிழன மட்டம் தட்டுவாழுங்க கவன இருங்க மானம் கேட்டு போகதிங்க DAP இருக்கற தமிழன் யல்லன் தலை ஆடீண்கா வீனா போனவங்க
நண்பர் sham அவர்களின் கூற்று மிகவும் தவறு. DAP யில் உள்ள தமிழர்கள் யாவரும் ‘தலையாட்டிங்க’ அல்லது வீணா போனவனுங்க, என்று கூறியுள்ளார். இல்லை. அக்கட்சியில் துணிச்சலுடன் கருத்தை கூறுபவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால், அவர்கள் ஓரம் கட்டப் படுவார்கள், அல்லது தூக்கி எறியப்படுவார்கள். பினாங்கில் அசோகன், நெகிரியில் டேவிட் தாஸ், சிலாங்கூரில் மனோகரன் மலையாளம், விலாயாவில் கண்ணன் ஜோகூரில் சந்திரன், பகாங்கில் ராமு, சின்னசாமி. பேராவில் பொன்முகம், கெடாவில் ஞானகுரு என பட்டியல் நீண்டுகொண்டே போகும். DAP யிலும் கூஜா தூக்கினால்தான் சீட் என்கிற நிலை உருவாகிவிட்டது.
டி ஏ பி இல் இந்தியர்களின் பிரச்னையை தட்டிகேட்க நிறைய உள்ளனர் ஆனால், இந்தியர்களின் தாய்கட்சி என்று கூவிக்கொல்லும் அங்குதான் யாரும் இல்லை ?
இருக்காங்க ஆனா சிங்கம் போல் இல்லையே தல,மெஜாரிட்டி மலாய் ஆயிறுவானோ பயம் டி.ஏ.பி,யில் சிங்கம்.பொருத்திருந்து பார்போம் சிங்கம்,வாழ்க நாராயண நாமம்.