பிரேசிலில் மர்ம நபர் ஒருவர் பார்க்கும் பெண்களை எல்லாம் கொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் கொயானியா நகரத்தில் மர்ம நபர் ஒருவன் பெண்களை தேடி தேடி கொலை செய்து வருகிறான்.
மோட்டார் சைக்களில் உலா வரும் அந்நபர் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்.
இதுவரை 13 வயதில் இருந்து 29 வயதிற்கு உட்பட்ட 12 பெண்களை கொலை செய்துள்ள அவன், கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கொலை செய்துள்ளான்.
இந்நிலையில் இவன் அடுத்து யாரை கொலை செய்யப்போகிறான் என தெரியாமல் பெண்கள் பீதியில் உள்ளனர்.
தற்போது இவனை பிடிக்க தீவிர முயற்சி கொண்ட பொலிசார் நகரம் முழுவதும் வலைவரித்தபோதும் இதுவரை அவன் சிக்கவில்லை.
மேலும் ஒவ்வொரு பெண்ணை கொலை செய்யும்போதும், அவன் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வருவதால் அவனை பிடிப்பதில் பொலிசார் திணறி வருகின்றனர்.
சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தை ,சிகப்பு ரோஜாக்கள் 2 என்ற தலைப்பில் நடிகர் கமலஹசனை மீண்டும் நடிக்க சொல்லலாம்