சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் டிஏபி-யைச் சந்தித்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்து பாஸ் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
மந்திரி புசார் தொடர்பான விவகாரங்களை விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட டிஏபி மத்திய செயல்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அன்வார், டிஏபி-க்கு நன்றி தெரிவித்ததுடன் அவ்விவகாரத்தில் இரு கட்சிகளும் கருத்தொற்றுமை கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விரைவில் பாஸ் தலைவர் ஹாடி ஆவாங்-கையும் அதன் மற்ற தலைவர்களையும் சந்திக்கப்போவதாவும் அவர் சொன்னார்.
மாநில அரசு செம்மையாக செயல்பட சிலாங்கூர் மந்திரி புசார் நெருக்கடிக்கு உடனே தீர்வு காண்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடும்ப அரசியலுக்கு டி எ பி ஒருகாலும் இணங்காது. திறமையான அரசியல்வாதிகள் ஒரே குடும்பத்திலிருந்து வந்தால் அது குடும்ப அரசியலென்று கருதுவது எவ்விதத்தில் சரியாகும் ???/
குல்லர் எல்லாம் ஒன்றுபட்டால் சூது நடக்கும்,நாராயண நாராயண.
தன் மனைவிக்கு பதவி வேணும்னு …. மற்றவர்கள் கூட்டதிர்கு சென்று பிச்சை கேட்பது ……..ஒரு தலைவருக்கு அழகல்ல ….. இவர் எடுத்த நடவடிக்கை சரியென்றால், இவர் செல்லாமல் , அவர்களே ஒத்துழைப்பு கொடுப்பார்களே …
இந்த காலத்தில எல்லாம் கேட்டுதான் வாங்கணும் சொம்மா ஒன்னு கிடைக்காது ராசா.தட்டுங்கள் திறக்க படும் கேளுங்கள் கொடுக்க படும்.அதனால போயி கேற்பதால் பிச்சை யாகாது ராசா.சில பேர் நினைப்பார்கள் உனக்கு வேண்டும் நா என்னை வந்து பார் என்று,வேண்டாம் என்றால் என்னை பார்க்க வராதே புரியுதா ராசா.நம்ம தலைவர்களே எல்லாம் கேட்டுதான் வாங்கறாங்க அதனால அவர்கள் அப்படி சொல்லலாமா தவறு ராசா தவறு வார்த்தையில் கவனம் வேண்டும்.
சாதாரண தலைவர் என்றால் பரவாயில்லை… இவர்தான் உலக மகா தலைவர் ஆச்ச்சே ……. இவருக்கும் இந்த நிலைதானா ….