கைரி: சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றி அமைச்சரவை விவாதித்தது

cabinetஇணையத்தில்  பிறர் உணர்வுகளுக்கு  மதிப்பளிக்காமல்  பதிவிடுவோருக்கு  எதிராக  விரைவாக  நடவடிக்கை  எடுப்பதற்கு  ஏதுவாக  நடப்புச்  சட்டங்களில்  திருத்தங்கள்  செய்வது  பற்றி  அமைச்சரவை  விவாதித்திருக்கிறது.

கடந்த  வார  அமைச்சரவைக்  கூட்டத்தில்  அது  பற்றி விவாதிக்கப்பட்டதாக  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அப்படிப்பட்ட  கருத்துகள் பதிவிடப்படும்போது  விரைவாக  நடவடிக்கை  எடுக்கப்படுவதை  உறுதிப்படுத்திக்கொள்ள  விரும்புகிறோம்”, என்றாரவர்.