அண்மைக் காலமாக, மலேசியாவில் வெறித்தனம் தலையெடுத்து வருவதாகக் கூறும் பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப், அதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
“நம் ஊடகங்களில் இன, சமய வெறி முக்கிய இடம்பெற்று வருவதைக் காண வருத்தமாக உள்ளது. இந்நிலை வரவர மோசமடைந்தும் வருகிறது.
“இப்போதைய நிலையே நாட்டின் எதிர்காலமாகி விடக்கூடாது”, என குருப் ‘நல்லதாக ஏதாவது சொல்லுங்கள்’ இயக்கத்தைத் தொடக்கி வைத்தபோது கூறினார். சுதந்திர தினத்தையும் மலேசிய தினத்தையும் ஒட்டி இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆவலும் அதுவே.. மதவெறியின்றி இனபாகுபாடுயின்றி நாடு நடைபோடுவதையே மக்கள் நாடுகின்றனர். முதலில், பதவியிலுள்ள அரசியல்வாதிகளிடம் இந்த திறந்த மனப்போக்கு பிறந்தால் மக்கள் உண்மையான சுதந்திரத்தை சுகமுடன் அனுபவிப்பர்… நடக்குமா இந்த பின்னடைவு காணும் மண்ணில்????
அரசாங்கம் தான் இதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் மக்கள் அல்ல .
‘நல்லதாக ஏதாவது சொல்லுங்கள்’ !!! சொல்லலாமே !!!
– லட்வியா பிரதமர் “பேரங்காடி பேரிடர்” காரணமாக பதவி விலகினார் !!!
– கொரியா பிரதமர் “கப்பல் பேரிடர்” காரணமாக பதவி விலகினார் !!!
– மலேசிய பிரதமர் ” விமான பேரிடர்” காரணமாக பதவி விலகாமல்
விமான பேரிடர் துக்கம் தொண்டையை அடைப்பதன் காரணமாக மனைவியுடன் புகழ் பெற்ற பேரங்காடியில் ஷாப்பிங் செய்கிறார்.
வெறி தனம் பண்றது யார் ??????நாராயண நாராயண
anonymous உங்கள் கருத்து அருமை.
பிரமாதமாக கருத்தை முன்வைக்கின்றீர் சிந்திக்க வைக்கின்றீர் வாழ்த்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.
எதிர்கட்சிகள் வெறித்தனம் பண்ணினால் தேச நிந்தனைச் சட்டம் பாயும். அப்படியென்றால் யார் வெறித்தனம் பண்ணுகின்றார்கள்? பேச வேண்டிய இடத்தில் பேசாமல் ஏதோ நாங்கள் இங்குக் கருத்தைச் சொல்லுகிறோமே அது போல் அல்லவா நீங்களும் சொல்லுகிறீர்கள்!
தலைவர்கர்கள் சும்மா எப்பப் பாத்தாலும் இப்படியே பட்டும் படாமலும், யாரையும் குறிப்பா சொல்லி மாட்டிக்கக் கூடாதுன்னு, பொதுவாகவே பேசறீங்க. என்ன புண்ணியம். கலட்டி, கழுவி உங்க வீட்டு பெட்டியிலே வச்சிருக்கிற முதுகெலும்ப பூட்டிக்கிட்டு, துணிச்சலா யாரு2 இன, சமய வெறியாட்டம் செய்யிராங்கனு நெத்தியிலே அடிச்ச மாதிரி சொல்லுங்க. பசப்பல் வேல ஒன்னும் புண்ணியமில்ல.
நஜிப் மற்றும் bn தான் காரணம்
வெறித்தனம் உச்சத்திற்கே சென்று விட்டது ! இதற்க்கு மூல காரணம் யார் என்று உங்களுக்கு தெரியாதா ?இன ,மத கலாச்சாரத்தில் குட்டையை குழப்புவது எல்லாம் யார் ?அவரவர் பாதையில்அவரவர் நடந்தால் நாடு அமைதியாகவும் சுபிட்ஷமாகவும் இருக்கும் முதலில் நீங்கள் தெளிவாய் இருங்கள் !!!