சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு இரு பெயர்களை அரண்மனைக்கு அனுப்ப பாஸ் எடுத்துள்ள முடிவிற்கு அது அளித்துள்ள காரணத்தை பிகேஆர் நிராகரித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரே ஒரு பெயரை மட்டும் சமர்ப்பிக்கையில் அவருக்கு மனசாட்சிக்குத்தல் ஏதும் இல்லை என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் சுட்டிக் காட்டினார். “சுல்தான் நான்கு பெயர்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த போதிலும், இது நடந்தது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார். சுல்தான் கேட்டுக்கொண்டவாறு ஒன்றுக்கும் கூடுதலான பெயரை சமர்ப்பிக்காதது அரண்மனையை “கட்டாயப்படுத்துவது” என்று கருதப்படும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி வாதிட்டார். மந்திரி புசார் பதவிக்கு வான் அஸிசாவை மட்டுமே முன்மொழிய வேண்டும் என்று ஆகஸ்ட் 17 இல் பக்கத்தான் தலைமைத்துவ மன்றம் எடுத்திருந்த முடிவுக்கு ஏற்ப பாஸ் நடந்து கொள்ளுமாறு அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டதற்கு எதிர்வினையாற்றிய முஸ்தாபா அலி மேற்கண்டவாறு கூறினார்.
செய்திகள்ஆகஸ்ட் 28, 2014
நீங்கள் எல்லாம் இனி வரும் தேர்தல்களில் பல மாநிலங்களில்
காணாமல் போவது உறுதி !
திருந்தாத உங்களை உடன் வைத்திருப்பதே பெரும் தவறு !
உங்களை நல்ல சமுதாயம் அறியும் !!!
பாஸ் கட்சிகாரர்கள் வழிக்கு வரமாட்டார் கள் என்று தெரிகிறது.
நாட்டில் ஏதாவது மூளை சலவை மருத்துவ மனை இருந்தால் சொல்லிவையுங்கள். அதற்கு முன் டோபிக்கு அனுப்புவோம்.
PKR துணை தலைவர் தேர்தலில் 10,000 வாக்குகளை குப்பையாகிவிட்டு
போட்டியில் இருந்து விலகல் அரசியல் பைத்தியம்.
பாஸ் அடம்பிடித்தால் அடுத்த தேர்தலில் தனிசையாகதான் போட்டி இடனும் !
விரக்தியுடன் முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதேன்???
நான் முன்பே கூறியிருந்தேன் முஸ்லிம்களையும் கம்யூனிஸ்டுகளையும் எக்காலத்திலும் நம்பவே முடியாது.
இந்த லட்சனத்தில….. புத்திர ஜெயா வேணுமாம் …….. பக்காத்தனுக்கு இப்படியொரு அவமானம் தேவையா …?…. உடன் இருந்தே குழி பறிக்கும் கட்சிகளுடன் கூட்டனி தேவையா..?