கோயம்புத்தூர் உதயகுமார் மலையாளிபோல ! இப்போது உனக்கு நேராகவே எழுதுகிறேன்..!
திராவிடம் என்பதை தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழனுக்கு தமிழன் என்ற பெயர் அதையும் தாண்டி ஆதித்தமிழன் என்ற லுமேரிய ,குமரிகண்டம் கால தமிழனுக்கு திரவியன், திரவிடன், திராவிடன் என்ற வட பொருளற்ற பேர் தேவை இல்லை. நீர் மேற்சுமத்திய அனைத்தும் கற்பனை. தமிழ் மொழியியல் வல்லமையில் ஏய்க்கும் இந்த திராவிட குணம்தான் இன்று தமிழன் ஏமாந்து போகக காரணம். எங்கள் தமிழ் மொழியில் எங்களை அடிமையாக்கிய அயோக்கியர்கள்தான் திராவிடர்கள்.
இப்படி தமிழர்களை முட்டாளாக்கியா உங்கள வந்தேறிகள் தனம் எங்களுக்கு இதுவரை எதையும் கொடுக்கவில்லை ஆனால் அலிபாபா மாயையில் இன்றும் திருடியதுதான் அதிகம்.
தமிழ் நாட்டின் வந்தேறிகள் என் பாசையில் கையேந்தி இதரவர்கள் திராவிடம் என்ற மனோவியல் மதிப்பில் தமிழர்களை ஏமாற்றி தமிழ் நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தில் அதிகாரத்தில் அரசு பணிகளை மண்ணையும் பொருளாதாரத்தையும் கல்வி பெருந்தொழில்களையும் தமிழர்கள் போர்வையில் கைப்பற்றி ஏறியவர்கள்.
தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை . மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்ற்றுகொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?
தமிழன் முந்தியா திராவிடன் முந்தியா? உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ? நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே !?
அப்போது பேசியது திராவிட நாடு என்று சென்னை மாகாணம் மட்டுமே ! ஏன்? அதில் ஐதராபாத் நிசாம் ,மைசூர் சமாதானம்,திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை ,அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் ,சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கனடா பகுதியும், சிறு மலையாலபகுதியும் இருந்தது. தமிழின முழுதாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கனடா, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்தது என்ன அநியாயம்?
தொன்மையான் தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க முடியாது.
திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?
ஆம்,,, திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது இழியவன் நடத்திய திட்டமிட்ட பாசிச இனவாதமே ! பார்ப்பான் ஆதிக்காதை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுததிகாரனின் ஆக்க்ரமிம்பு அறிவிலி கொடூரம்தான் காரணம்.
திராவிடம் என்பது பிற மொழி காரர்கள் ஆதிக்கம் தமிழர்கள் மீதும் தமிழர்களின் இறை நம்பிக்கை மீதும் கை வைத்தால் தமிழர்களை வீழ்த்தலாம் என்பது “ஈஇன்” அடிப்படை அரசியல் தனம். ஆனால் அரசியல் வேண்டாம் அவன் சார்ந்த குள்ள நரிகள் கூட்டத்தை அதில் இணைத்து இன்று வரை திராவிடம் பிறரின் அரசியல் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். திராவிட வீரமணியின் சொத்து தமிழர்களின் உப்பு.
ஆம்,, தமிழர்கள் திராவிட குழப்பக்காரன் குழுமத்தில் இருந்து என்றோ வெளி ஏறி விட்டான். ஆனால் இன்னும் தப்பி ஒட்டிக்கொண்ட மரபணு
பாசத்தில் இன்றும் சில வேமானி தலைகள் உளறிக்கொண்டு உள்ளார்கள்.
திராவிடம் மரபினமல்ல ,மொழியினமல்ல ,பண்பாட்டு இனமல்ல , நாகரீக மடதனத்தில் சமையத்தை மறுத்து பார்பனை எதிர்ப்பில் எங்களை ஏமாற்றிய கள்ளன். மனிதன் செய்த நாத்திகம் இன்னும் வெல்ல வில்லை அதற்கு அந்த ஆன்மீகமும் ( சக்தி ) ,ஆண்மையும் இல்லை!
திராவிடத்தால் வடுகர் அரசியல் ஆதிக்கம் எங்கள் தமிழ் மண்ணில் தற்காலிக தளமிட்டுள்ளது…..தமிழர்களாகிய நாம் தமிழர் , தமிழர் தேசியம் போன்ற முன் எடுப்புகள் இன்று தமிழ் சொந்தங்களாக 2016ல் திரள்வோம்.
எங்கள் பகைவன் திராவிடன் இன்று மறைவான் தமிழினத்தை எழிச்சி யுர செய்வோம். உலக அரசியல் அரங்கில் தம் தேசிய இனமே தங்கள் தாய்மொழி இனமே தம் நாட்டை முகமாக கொண்டுள்ளது.அதுபோல 10 கோடி தமிழர்கள் வெளியாகும் நாள் தூரமில்லை. 1920 தமிழனுக்கும் 2020 தமிழனக்கும் உள்ள மரபணு உணர்வை நீ விரைவில் அறிவாய்.
திரவிடன் என்ற கால் விலங்கும் இந்தியன் என்ற கை விலங்கும் உடைபடும் நாளும் வந்துகொண்டு உள்ளது.
மொழி வழி தேசிய நாடுகள் வரிசையில் தமிழ் ஈழமும் தமிழர் நாடும் மலரும் . வானும் மண்ணும் கடல் பரப்பும் அவர் அவர் ஆட்சி அதிகாத்தில் வரும். மொழி வழி தேசியங்கள் உலகம் முழுதும் வளர்ந்து
திராவிடம் மண்ணை கௌவும். கணக்கில் வைத்துக்கொள்.தமிழர் நாடு குடியரசை படிக்க படைக்க அணி சேருவோம் அப்போது நீ சொன்ன இழி நிலை திருப்பி அடிக்க வேண்டாம் என்று இந்த தமிழன் வேண்டுவோம். காரணம் மானுட உலகில் மனிதன் மட்டும் மனிதானாக நல்ல தமிழனாக பேர் எடுக்க ஆசைப்படுகிறோம்.
-பொன் ரங்கன்
இயக்குனர் ,உலகத் தமிழர் பாதுகாப்பு மையம்
உ.தலைவர் நாம் தமிழர் மலேசியா
திருட்டு திராவிடனிடம் ஆட்சியையும், தமிழ் ஊடகங்களும், தமிழ் திரை உலகத்தையும் இழந்த தமிழனுக்கு, தமிழர் தேசியமும், தமிழ் ஈழமும் கானல் நீரே ! 6 கோடி தமிழனை 2 கோடி திராவிடன் மிதிக்கிறான் ! ஈழ தமிழனை காப்பாற்றாமல் போனதுக்கு திருட்டு திராவிடனின் அரசியலே முக்கிய காரணம் என்று தமிழன் உணர்ந்து மீழ்ச்சி பெறவேண்டும் !
அன்பர் தமிழர் நந்தாவிற்கு வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இல்லை என்பேன். நானும் அண்ணன் தமிழனும், தனித்துவம் மிக்க தமிழர் சமயம் காணத் துடிக்கும் தன்மானத் தமிழன் தேனீயும், அறிவிலும் எழுத்திலும் நிதானம் தவறாத தம்பி உதயகுமார் அவர்களும், தமிழின உணர்வுமக்க கட்டுரையாளர் பொன் ரங்கன் அவர்களின் மூல பதிவையும் , இதற்கான நாகரிகமான பதிலுரைகளையும், சிலரின் வேகங்களையும் , உணர்வோடும் ,நிதானமாகவும் ஒருமுறை படித்துவிட்டு நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவிட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஒரு முறை அதைச் செய்துவிட்டு எழுதுங்கள்.முரட்டாட்டம் வேண்டாமே!
திராவிடம் என்ற ஒரு இனம் இல்லை ,மொழியும் இல்லை , சமயமும் இல்லை, தமிழ் நாட்டில்தான் திராவிடம் திராவிடம் என்று கொக்கரிக்கிறார்கள் ! தெலுங்கு பிரதேசத்தில் தன்னை தெலுங்கன் என்கிறான் , மலையாள பிரதேசத்தில் தன்னை மலையாளி என்கிறான் , அங்கு எவனும் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்ளவில்லை ,திருட்டு திராவிடர்கள் எங்கள் இனிய தமிழ் மொழியை கொண்டு தாக்குகிறீர்கள் ( தெலுங்கர் தட்சணாமூர்த்தி என்ற கலைஞர் கருனாநீதி ) போன்ற ஆசாமிகள் தமிழனுக்கு சாதகமான முடிவுகள் செய்ய மாட்டார்கள் ! தமிழனாக சிந்திக்க துவங்கிய நான் ”திருட்டு திராவிடன்” ஆலோசனை தேவை இல்லை ! நீங்கள் உண்மையில் தமிழராக இருந்தால் எதுக்கு திராவிடன் என்ற சொத்தை பெயர் உங்களுக்கு ? முரட்டாட்டம் இனிமேல்தான் துவங்கும் திராவிடரே !
சரி… தமிழர் நந்த உங்களுக்குப் படிக்க அவகாசம் கொடுத்தேன். உங்களின் முன்கோபம் உங்களை சரித்திர உண்மைகளைவிட்டு உங்களை தடம்மாறச் செய்கிறது. தடித்த வார்த்தைகள் தடித்த உள்ளத்தின் வெளிப்பாடு. அதை உங்கள் எழுத்தில் காண்கிறேன். என் வயதில் பாதிவயதுகூட எட்டாதவர் நீங்கள். என் வயதில் எவ்வளவு தமிழ் , ஆங்கில நூல்களைப் படித்திருப்பேன் என்பதை யூகிக்கக்கூட உங்களால் இயலாது என்பதை அறிவேன். அரைகுறை அரசியல் அறிவும், மேம்போக்கான வாசிப்புப் பழக்கமும் வாதங்கள் புரிய கைகொடுக்காது என்பதை நீங்கள் அறியாத காரணத்தால் முரட்டாட்டம் துவங்கும் என மிரட்டிப் பார்க்கிறீர். இந்திய சரித்திரம் அறிந்திருந்தால் நீர் இப்படி எழுதமாட்டீர். படிப்பறிவும் ஆழ்ந்த ஆய்வும் இல்லாதவரிடம் பொதுவாக நான் வதங்களை முன்வைப்பதில்லை. உம்மிடம் நான் முரட்டாட்டம் ஆடத்தயார். திராவிடம் எனும் ஒன்று இல்லை என்பதற்கான ஆதாரங்களை முன்வையும் தமிழர் நந்தா. உம்முடைய ஆட்டத்தை நானும் பாரக்கிறேன்.
உணர்ச்சிபூர்வமான தளத்தில் நின்று தமிழர் நந்தா கருத்து எழுதுவதால், திராவிடன் என்ற வார்த்தைக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும்தான் இலக்கணம் என்ற குறுகிய அடைமொழிக்கு வந்து விட்டார் போலும். இவ்விருவரும் பெயரளவில் திராவிட கழகத்தின் பெயரை அரசியலில் வைத்துக் கொண்டு அதன் உண்மை தத்துவத்தை விட்டு அகன்று வெகு நாளாகி விட்டது என்பதில் பலருக்கும் ஒருமித்த கருத்து உண்டு. இதில் ஜெயலலிதாவுக்கும் திராவிட உணர்விற்கும் அறவே சம்பந்தம் இல்லை என்று நாம் சொல்லியா தங்களுக்கு தெரிய வேண்டும்?. ஏதோ ஒரு சந்தர்ப்பவாத அரசியலில் அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றி அரசியல் நடத்துபவர் ஜெயலலிதா. அவரின் திராவிட உணர்விற்காக யாரும் அவருக்கு ஒட்டு போடவில்லை. எம்.ஜி.ஆர். எனும் தனி நபரின் உணர்வில் தமிழ் நாட்டு ஆட்சியைப் பிடித்து அரசியல் நடத்துகின்றார். மலேசியாவில் இருந்துக் கொண்டு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் தமிழியம் பேசலாம். ஆனால் அது தமிழ் நாட்டைப் பொறுத்த வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். அங்கே தமிழ், தமிழர் உணர்வை விட, சாதிய உணர்வும், சாக்கடையான அரசியல் உணர்வும்தான் மேலோங்கி நிற்கும். இங்கே நாம் கருத்து எழுதுவதைப் போல அங்கே எழுதுவதர்க்குக் கூட நமக்கு சுதந்திரம் இருக்காது. காரணம் அங்கே தமிழர்கள் என்போர் தமிழர்களாக வாழ்வதில்லை. அதை இந்நாட்டு தமிழர்களை கண்டு, இங்கே நீங்கள் “தமிழர்களா வாழ்கின்றீர்கள்” என்று சொன்னவர் அறிஞர் அண்ணா என்பதாக ஞாபகம். நம் நிலை வேறு அவர்கள் நிலை வேறு. ஆகையால், அன்றைய திராவிட கழகத்தார் தமிழர்களை தலை நிமிர வைத்ததை மறந்து விடாமல் அவர்களை வாழ்த்த மனம் இல்லாவிட்டாலும் தூற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். நீங்களே இன்று தமிழ் நாட்டிர்க்குச் சென்று “தமிழர்கள்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்” பகிங்கராமாக பேசி பாருங்கள் அப்புறம் நீங்கள் மலேசியா மண்ணிற்கு திரும்புவதற்கு கை கால் இருக்காது. காரணம் அந்நாட்டில் இன்று தமிழர் உணர்வு உள்ளவர்கள் சிறுபான்மையாகி விட்டனர். அவ்வாறு மிஞ்சி இருப்பது உண்மையானா திராவிடத் தொண்டர்களே. நான் தலைவர்களைக் குறிக்கவில்லை.
திருட்டு திராவிடன் என்ற பொருளுக்கு திராவிடனே விளக்கம் சொல்லலாம் ! ஆரியனும் திராவிடனும் ஒன்னு அதை அறியாத தமிழனின் வாயில் விழுந்தது மண்ணு ! திராவிடனுக்கு என்று மொழி இல்லை இனம் இல்லை , இல்லாத ஒரு இனத்துக்கு ஆதாரம் கேட்கும் நீங்கள் சுய நினைவில்தான் இருக்கிறீரா ? மொத்தத்தில் தமிழன் மத்தியில் திராவிட மாயையை புகுத்தியவன் ஒரு அயோக்கியன் ! நீங்கள் தமிழனாக இருந்தால் உடனே புரியும் !
அண்ணா ,எங்கள் அண்ணா ,அறிஞர் அண்ணா , அடுத்த அகவையில் அடியெடுத்து வைக்கும் அண்ணா ,எங்கள் அண்ணா ,அறிஞர் அண்ணா ,உனக்கு நிகர் நீயே அண்ணா ,அறிஞர் அண்ணா ,ஆயிரம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அண்ணா ,எமக்கு இதயம் இருக்கும் அண்ணா ,எம் இதயம் இயங்கும் அண்ணா ,எம் இதயம் இயங்கும் வரை அண்ணா ,எம் இதயம் சுமக்கும் அண்ணா ,என்றும் நின் புகழ் சங்காய் முழங்குவோமே அண்ணா ,எங்கள் அண்ணா ,அறிஞர் அண்ணா ,பேரறிஞர் அண்ணா ,வற்றா ஜீவநதியாய் என்றும் நீயே அண்ணா .
நானும் ஒரு காலத்தில் திராவிடன் என்ற எண்ணத்தில் இருந்தேன். நாம் திராவிடர்கள் தான் ஆனால் மற்ற திராவிடர்கள் அதை கண்டு கொள்வதே இல்லை அப்படி இருக்கையில் நமக்கு மட்டும் வேர்த்தா வடிகிறது? திராவிடன் என்ற பேரில் மற்ற த்ராவிடங்கள் தமிழகம் வந்து வாழ்கை நடத்துகின்றனர் ஆனால் அங்கே தமிழர்களின் நிலை? கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையையே த்ரக்கவிடாமல் எத்தனை ஆண்டுகள் மூடிவத்திருன்தனர்? மற்ற திராவிட நாடுகள் தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கூறி தமிழர்களை எள்ளி நகையாடும் பொது திராவிடன் என்று நாம் ஏன் கூறிக்கொள்ளவேண்டும்?
“நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”
-மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதியது.
இப்பாடலில் வரும் “திராவிட நல்திருநாடும்” எனும் வரியை எழுதியவர் யாரோ ஒரு பார்ப்பனரோ அல்லது வெள்ளையனோ அல்லர். தமிழாய்ந்த , தமிழ் உணர்வுள்ள தமிழன் ஆவார். இவருக்கில்லாத தமிழ்ப்பற்றா உமக்குள்ளது தமிழர் நந்தா? இல்லாத ஒன்றை எழுதி தமிழினத்தை ஏமாற்றியவரா சுந்தரனார்? அல்லது உம் வார்த்தைபடி திருட்டு திராவிடனிடம் வாங்கிக் குடித்துவிட்டு எழுதியதா இப் பாடல் வரிகள். அல்லது எந்த பக்கத்து மாநிலத்தவனிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு எழுதினார் சுந்தரனார்?
தர்க்கவியல் என்றால் என்னவென்று தெரியுமா உமக்கு? இல்லை என்று சொல்பவனும் அப்படிச் சொல்ல ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். இருக்கிறது என்று வாதத்தை முன்வைப்பவனும் ஆதாரத்தை வைத்தேயாகவேண்டும். இதை அறியாத நீர் என்னைப் பார்த்து இரண்டாந்தர மனிதனைப்போல் ” சுய நினைவில்தான் இருக்கிறீரா?” என்று கேட்கிறீர். உம்முடைய வாதப்படி மனோன்மணீயம் பெ.சுந்தரனார் சுய நினைவின்றி இல்லாத திராவிடத்தை இருக்கிறது என்று உளறிவிட்டாரா? அல்லது திராவிட மாயையை தமிழரிடை புகுத்திய அயோக்கியனாகிவிட்டாரா? ” திராவிடமும் ஆரியமும் ஒன்று” என்று உலகத்திலேயே ஒரு புதிய கண்டுபிடிப்பை நீர் கண்டுபிடித்துள்ளீர். இதற்காக உமக்கு எந்த ஆரியனாவது விழாமல் விழா எடுக்கவேண்டும். இதற்குத்தான் நான் உலகம் அறியாத கத்துக்குட்டிகளிடம் உயரிய கருத்துவாதங்களை முன் வைக்கக் கூடாது என்றிருந்தேன்.
தமிழர் நந்தனே… இங்கே முன்வைத்த கேள்விகளுக்கு ஒன்று விடாமல் பதில் தந்தாலன்றி நான் உம்மோடு வாதம் செய்யமாட்டேன். எனக்கு நேரம் முக்கியம். கருத்திடுவதிலும் சில நியாயங்கள் முக்கியம். தெருச் சண்டைக்கும் கருத்துப்போருக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியவேண்டும். அங்கே இருந்து இங்கேயும், இங்கே இருந்து அங்கேயும் தாவும் குரங்கு வாதங்களைத் தவிர்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அடுத்து திட்டுவது அல்லது சாடுவது , தேவையே இல்லாமல் மலையாளிகளையும் கன்னடர்களையும் தெலுங்கர்களையும் அரசியல்வாதிகளைச் சாட இனத்தை இழுப்பது நல்ல கருத்து களத்திற்கு அழகல்ல நல்ல தமிழனுக்கும் அழகல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். கொள்கைக்கும் அதைச் செயல்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு செயல்படும் ஸ்தாபனத்திற்கும் முடிச்சுப் போட்டு கொள்கைக் கோட்பாடுகளைச் சாடுவது பைத்தியக்காரத் தனம் என்பதை அன்பர் தேனீ அழகாகப் புரிந்துவைத்திருக்கிறார். தமிழர் நந்தாவும் புரிந்துகொள்ள வேண்டும். புரியாமல் குழப்புவது பிறரையும் குழம்பச் செய்யும் செயலாகும் என்பதைச் சொல்லிவைக்கிறேன்.
என் தாய்தமிழ் உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. அந்தத் துடிப்பு, அந்தக் கோபம், அந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. இதை அறியாதவர்களும் அல்லர் பெரியாரியவாதிகள். உங்களுக்கான விளக்கம் தற்போது என்னிடம் இருந்தாலும் அதைத் தங்களுக்காக முன் வைத்தால் தமிழர் நந்தாவுடன் நான் புரியும் கருத்தாடல் தடைபடும் என்பதால் தவிர்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஆனாலும் இந்த வாதம் கருத்தாளமுடன் தொடர்ந்தால் அது குறித்தும் இங்கே பேசுவேன். நன்றி.
தேனீ அவர்களே ! // தமிழ் நாட்டிர்க்குச் சென்று “தமிழர்கள்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்” பகிங்கராமாக பேசி பாருங்கள் அப்புறம் நீங்கள் மலேசியா மண்ணிற்கு திரும்புவதற்கு கை கால் இருக்காது // இப்படி சொன்ன உங்களுக்கு இன உணர்வும், மான மரியாதை இல்லையா ? தென் இந்திய திரைப்பட சங்கத்தில் தமிழ் பேசக்கூடாது என்று தமிழர் அல்லாதவர் ( திராவிடர் ) தீர்மானம் கொண்டு வந்தது உங்களுக்கு தெரியும்மா ? தமிழ் நாட்டில் தமிழனை முட்டாளாக்குவதே தலையாய கடமையாக கொண்டுள்ளான் இந்த திருட்டு திராவிடன் ! நான் கர்நாடகத்திலோ , ஆந்தராவிலோ,கேரளாவிலோ தமிழர் ஆட்சி அமைக்கவேண்டும் என்று சொல்லவில்லையே ? உங்களை போன்ற இன உணர்வு இல்லாதவரோடு தமிழ் இன வெற்றிக்கு பயணித்தால் தோல்வி நிச்சயம் ! 170,000,00 ஈழ உறவுகளை பரிகொடுத்ததுக்கு உங்களை போன்ற சாக்கடைகளோடு பயணித்ததால் வந்தது இந்த இழப்பு ! கோமாளி திராவிடனுக்கும் இந்த பதிவு !
நெஞ்சம் உண்டு ….
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்……………..
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்……….
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
திட்டுவது வேறு, காரணத்தோடு வாதங்களை முன் வைப்பது வேறு என்பதைக்கூட புரியாத நந்தனுடன் வாதிடுவது இயலாத காரியம். நன்றி.
தமிழன் உணர்வு இல்லையானால் யாம் இங்கே வருவதில் அர்த்தம் இருக்காதே. தமிழில் பேசக் கூடாது என்று சொன்னவன் கேட்டதை, சொன்னவன் காது செவிடாகும்படி ஓர் அறை விட்டிருக்க வேண்டாமா?. அதை விடுத்து இந்த கருத்துக் களத்தில் வீராப்பு பேசி என்ன பயன்?. அதானால் தமிழ் நாட்டில் தமிழர் உணர்வு உள்ளவர் வெகு சிலர். சாதிய உணர்வு உள்ளவர் பலர் என்று சொன்னது. அங்கே போய் பாருங்கள்.
திராவிடத்தை தாங்குபவன் தேனியாக்கவைதவிர எவனும் தமிழனில்லை…
திராவிடனுக்கு விளக்கம் இல்லை என்றும்,அது ஒரு தமிழனின் மத்தியில் திணிக்கப்பட மாயை என்று ”திராவிடன்” ஒப்புக்கொள்ள மறுக்கிறார் ! தேனீ அவருக்கு தமிழன் உணர்வு என்னவென்று உணராதவன் நான் இல்லை ! ”தமிழர்கள்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்” பகிங்கராமாக பேசி பாருங்கள் அப்புறம் நீங்கள் மலேசியா மண்ணிற்கு திரும்புவதற்கு கை கால் இருக்காது” இப்படி சொன்ன உங்களுக்கு நானே நேரில் வந்து வாய் கிழிய குத்து விட்டிருக்கவேண்டும் ! வாய்ப்பு இருந்தால் அறிஞர் குணாவின் ”திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூலை தேனியும் , திராவிடரும் படித்து பயன் பெறுங்கள் !
சீனரால் வீழ்ந்தோம் என்று மலாயர் புலம்புவதற்கும், மலாயரால் வீழ்ந்தோம் என்று இந்தியர்கள் புலம்புவதற்கும், வெள்ளையனால் வீழ்ந்தோம் என்று மலேசியர்கள் புலம்புவதற்கும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தமிழர்களில் சிலர் புலம்புவதற்கும் எந்த பெரிய வேற்றுமையும் இல்லை. தன்மானம் உள்ள, நியாயமான போராட்ட குணமுள்ள, ஒழுக்கத்தை உயிரென மதிக்கக் கூடிய எந்த இனத்தையும் எந்தக் கொம்பனாலும் ஒருபோதும் வீழ்த்தவே முடியாது. இவையெல்லாம் இல்லாதவர்கள் மற்றவரைக் குற்றம் சொல்லி ஒப்பாரி வைப்பதைத் தவிர்க்கவே முடியாது. ஒரு வகையில் இவர்கள் கையாலாகாத மன நோயாளிகள். மற்றவர்மீது பழியைப் போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ள முயற்சிக்கும் எஸ்கேபிசவாதிகள்.
இப்படியே மற்றவர்மீது பழிபோட்டுவிட்டு தங்களின் இயலாமையை மறைத்து ஒரு ஒப்பாரிக் கூட்டத்தை கூட்டி … ” இதோ பார் எங்களின் படை, வானத்தை வில்லாக வளைப்போம்… பூமியை இரண்டாகப் பிளப்போம் … என்று வாய் சவடால் விடும் இவர்களால் எதையும் உருப்படியாகச் செய்ய இயலாது.
பணத்தையோ அல்லது பொருளையோ திருடனிடம் பறிகொடுத்தவன் என்ன சொல்லுவான்? அய்யோ என்னை ஏமாற்றி என் பணத்தை அபகரித்துவிட்டான் என்பானே அன்றி , தான் அறியாமையினாலும் தன்னுடைய பேராசையினாலும் ஏமாந்தனர் என்பதை ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டான். அப்படிப்பட்ட சூரப் புலிகளே இன்று திராவிடத்தை பழிபோட்டு தூற்றுபவர்களும் , திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பழிபோடுபவர்களும் ஆகும்.
உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியாவைக் குறித்து பெருமை பேசுகிறார்கள். வாக்குரிமை எனும் பேராயுதம் கொண்டு எவரையும் ஆட்சி கட்டிலில் ஏற்றலாம் அல்லது இறக்கலாம். அப்படி இருக்க உங்களால் ஏன் அதைச் செய்ய முடியவில்லை? இதைச் செய்ய முடியாதவர்கள் இன்னும் எத்தனை காலம் திருட்டு திராவிடன்… திருட்டு திராவிடன் என்று தமிழினத்தை ஏமாற்றிக்கொண்டிருப்பீர்கள்? உங்களின் நிலை இப்படி இருக்க, உண்மையைச் சொல்லும் எங்களைக் குத்துவேன் என்றும், அடிப்பேன் என்றும், மிதிப்பேன் என்றும் சிலிர்க்கிறீர்கள்… சிம்புகிறீர்கள்.. உண்மையிலேயே இந்த சிலிர்ப்பை, சிம்புதலை யாரிடம் காட்டியிருக்க வேண்டும் தெரியுமா? இத்துனை காலம் உமக்கு ஆரியக்கூத்து காட்டினானே அந்த ஆரியனிடம் காட்டி இருக்க வேண்டும் உங்கள் வீரத்தை… உங்கள்… புஜ பராகிரமத்தை. அதைவிடுத்து அறிவுபூர்வமாகச் சொன்ன தேனீயைப் பார்த்து … “நானே நேரில் வந்து வாய் கிழிய ஒரு குத்து விட்டிருக்க வேண்டும்” என்று தீவிரவாதம் பேசுவதுதான் நவீன தமிழியமோ? இதுதான் தமிழன் நந்தனின் வீரமோ? நந்தனே … தமிழில் பேசக்கூடாது என்று சொன்னவன் எவனாக இருந்தாலும், ஏன் ஒரு தமிழனாகவே இருந்தாலும் அங்கேயே பாடம் நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து ஒப்பாரி ஏன்?
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா , என்ற பாடலின் சொந்தம், [ எம் ஜி ஆர் ] என்ற மூன்றெலுத்தின் சகாப்த்தம் ,இதிலும் திராவிடம் உள்ளதே ,தன்மானதமிழன் என்று கூறி ,வாதங்கள் வைக்க வகையில்லாமல் ,திராவிடத்தை எதிர்ப்பவன் தமிழர் என்றும் ,திராவிடத்தை ஆதரிப்பவன் தமிழர் அல்ல என்றும் ,வாதிடுவது வக்கற்ற வாதமாய்ப் போனதே ,திராவிடத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு தெரியாமல் ,தமிழன் வீழ்ந்தான் என்று கூறி பதவி பிடிக்க பாதை தேடுகிறார்கள் ,பாதை தெரியாமல் ,நாம் தமிழர் என்று ,தகுதியற்ற வார்த்தைகள் இட்டு ,தமிழன் தரம் தாழ்த்தாதீர்கள் ,முடிந்தால் ,தெரிந்தால் வாதங்கள் வையுங்கள் ,விடையங்களைக் காண்போம் .
திராவிடனே உன் கிறுக்கு பேச்சை நிறுத்து ! தமிழ் நாட்டில் தமிழனை கை கால் வெட்டி அனுப்புவார்களாம் ! அது தீவீரவாதம் இல்லையாம் , நான் வாயில் குத்துவேன் என்பதுதான் தீவீரமா உனக்கு ? திராவிடன் என்றால் என்ன என்று விளக்கம் சொல்ல முடியாத வெண்ணை நீ ! நாங்கள் தமிழராக சிந்திப்பதால் திருட்டு திராவிடனுக்கு இழப்பு வந்துவிட்டது !
ஐயோ ஐயோ திராவிடத்துக்கு விளக்கம் வேண்டுமா நந்தா ?
அது ஒரு வெங்காயம் . உரித்தால் இருக்கும் ஆனா இருக்காது.
எழு தமிழா இனி விழுமுன் எழு !
ஏழாம் அறிவு படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டு தான் இலங்கையில் திரையிட பட்டது. நீக்கபட்ட வீடியோவை இங்கே பார்க்கலாம் மேலும் பதிய பதிவிகளை இணைக்க பட்டுள்ளது
நம் தமிழ் சமுகத்தில் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள். தமிழ் இன ஒடுக்குமுறைகள், திட்டமிட்ட இன அழிப்புகள். நம் வரலாறு சம்பந்தமாக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்று என் மனதில் ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே இந்த காணொளிகள்
தொலைந்து போன ஒரு குழந்தைக்கு, அம்மா பேர்,
அப்பா பேர், தன் வீடு எங்கே இருக்கிறது, என்று தெரிந்து வைத்துக்கொள்வது, எவளோ முக்கியமோ. அவளோ முக்கியம், நம்ம வரலாற்றை, நாம தெரிந்து வைத்து கொள்வது. நாங்கள் எங்கள் வரலாற்றை மறந்து விட்டதால் தான் எங்களுடைய அறிவியலையும் மறந்து விட்டோம், எங்களுடைய வீரமும் பெருமையும் நமக்கு தெரிய கூடாது என்பதற்காக , நம்மை ஆண்ட ஒவ்வொருத்தரும் நமக்கு தெரியாமல் அதை நன்கு திட்டம் போட்டு மறைத்துவிட்டார்கள்,
மத மாற்றம், இன மாற்றம், மொழி மாற்றம், என்று நமக்கான அடையாளத்தையும், அழித்துவிட்டார்கள், புது வருட நாளில், வீட்டில் இருக்கும் பழய பொருட்களை எல்லாம் கொளுத்த வேண்டும், என்று சொல்லி. தமிழனுடைய பொக்கிஷமான. ஓலைச்சுவடிகளை. புத்தகங்களை எல்லாம் எரிக்க வைதார்கள்.
அதைவிட கொடுமை தமிழர்களுடைய வரலாற்று. கண்டுபிடிப்புகள். ஆயிரக்கணக்கான. அபூர்வமான புத்தகங்கள். இருந்த இலங்கையின் யாழ்பாணத்தில்.
தமிழர்களின் வரலாற்று தொன்மை கூறும் சில அரிய புத்தகங்கள்,முக்கியமான நூல்கள் உள்ளிட்ட 97,000 புத்தகங்கள் இந்த நூலகத்தில் மாத்திரமே இருந்தமையினால். இந்தியாவிலிருந்து கூட பல கல்விமான்கள்.
யாழ் நூலகத்திற்கு வந்து அவற்றைப் படித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தமிழர்களது கலாச்சாரத்திற்குப் பெரும் பங்காற்றிய தத்துவாசிரியர்கள், பழம்பெரும் நாடாக ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கோவிலாக இருந்த நுலகத்தை 1981 மே 31 அன்று ,இலங்கை ராணுவம் அனைத்தயும் எரிந்து விடார்கள். நுலகத்தை முழுவதுமாக எரித்து சாம்பலாக்கி விட்டார்கள்.
எனவே எங்களுடைய வரலாற்றை நாம் தெரிந்து கொண்டு. அதை தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுப்போம். மாற்றங்களை மன்டியிட்டு பெறத்தேவையில்லை மார்தட்டி பெறுவோம்.
ஒரு, தமிழனை, ஒன்பது, நாடு, சேர்ந்து, அடிப்பது, வீரம், இல்லை கோலைதனம், துரோகம், தமிழனை, அடிப்பவனை, திருப்பி அடிக்கணும். அப்பதான் உலகத்தில் எந்த மூலையிலும் இருட்டில் கூட,ஒரு, தமிழன்மேல், கை,வைக்க, ஒவ்வொருத்தனும் பயப்புடவான்,
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும்.. பாதை மாறலாமா? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்… கொள்கை சாகலாமா..?
விடியெலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்? உன் நெஞ்சம் முழுவதும் வீரம்,
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம். உணர்வை இழக்கலாமா? உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?
வந்தால். மலையாய் .வருவோம். வீழ்ந்தால். விதையாய். வீழ்வோம் மீண்டும். மீண்டும். எழுவோம். தமிழன் _
தமிழன் ஓடிய இடமெல்லாம் அடி வாங்கினான்
தமிழன் மலேசியாவில் அடி வாங்கினான்!ஓடினான்
தமிழன் பர்மாவில் அடி வாங்கினான்! ஓடினான்
தமிழன் அரேபியாவில் அடி வாங்கினான்! ஓடினான்
தமிழன் மும்பை பெங்களூரியில் அடி வாங்கினான்!ஓடினான் தமிழன் தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கினான்! ஓடினான் தமிழன் கேரளாவில் அடி வாங்கினான்! ஓடினான்
இப்படி போன இடமெல்லாம் அடி வாங்கிய தமிழன், ஒரே இடத்தில் மட்டும்தான் திருப்பி அடித்தான் அதுதான் இலங்கையில் திருப்பி அடித்த அந்த மறத்தமிழன் தான் பிரபாகரன் என்ற மாவீரன் அடிப்பவன் இனவாதி அடி வாங்கியன் ஒரு முறை திருப்பி அடித்தால் தீவிரவாதியா???
வந்தவர் வாழ. வாழ்ந்தவர் வீழ்வதா???
வீழ்வது நாமாகா இருந்தாலும்…..
வாழ்வது எம் இனமாக இருக்கட்டும்….
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ,
விழ விழ எழுவோம். நாங்கள் விதைக்கபட்டவர்கள்… முளைத்து கொண்டே இருப்போம்…
வந்தால் அலையாய் வருவோம்..
வீழ்ந்தால் விதையாய் விழ்வோம்..
மீண்டும் மீண்டும். எழுவோம்.. எழுவோம்..எழுவாய் தமிழா
யார் விளக்கம் சொல்லவில்லை நந்தா ? திராவிடம் என்று ஒன்று இல்லை என்றாய். திராவிடம் என்று ஒன்று இல்லாவிட்டால் தமிழ்ப்புலவன் மனோன்மணிய சுந்தரன் திராவிடம் பற்றி எழுதி இருப்பானா? என்றேன். அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தேன். எதற்குமே பதில் இல்லை. இப்போது வெண்ணெய் என்கிறாய், எண்ணெய் என்கிறாய். பூனை கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டதாக ஒப்பாரி வைக்கிறதோ? வேரற்ற மரமாய் இருக்கிறது உமது தமிழிய வாதம். ஒளியற்ற இருளாய் கிடக்கிறது உமது தமிழியப் பார்வை. நீங்கள் தமிழராக சிந்திப்பதால் எங்களுக்கு இழப்பா? வேடிக்கையாக இருக்கிறது உமது பேச்சு ! வினோதமாக இருக்கிறது உமது பார்வை ! பெரியாரியம் என்பது எழுந்து நிற்கும் எக்குக் கோட்டை. இடித்துவிடலாம் என மனப்பால் குடிக்காதீர். பெரிய ஆதிக்க சக்தியையே திரும்பிப் பார்க்க வைத்தது பெரியாரின் திராவிடம். தேனீ சொன்னதைப் புரிந்துகொள்ள முடியாத தமிழர் நந்தாவே … உம்மைக் கண்டு அழுவதா ?சிரிப்பதா? கருத்தறிந்து எழுதும். உண்மையான தமிழுணர்வு மிக்கோர் இல்லாத தமிழ் நாட்டில் நீர் தமிழர் ஆட்சி பற்றி பேசினால் அதை புரிந்து போற்றுவதற்கு நாதி இல்லை. உன் உணர்வை புரிந்துகொள்ளக்கூடியவர்களாக திராவிடத் தமிழன்தான் இருப்பான். ஏன் என்றால்… பெரியாரின் உணர்வுள்ள தொண்டனிடமே இனமான உணர்வைக் காண இயலும். எனும் பொருளில் சொன்னதை புரிந்துகொள்ளாமல் தேனீ தீவிரவாதம் பேசியதாக ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? “ஆப்பிரிக்கக் காட்டுக்குள்ளே போய் அறத்தைப் பற்றி பேசினால் உயிரோடு திரும்ப மாட்டாய்.” என்று சொன்னால் என்ன பொருள்? அதற்கு தீவிரவாதமா? புத்திமதி . உன் உணர்வை புரிந்துகொண்டு உன்னை ஆதரிப்பவன் இல்லை என்று பொருள். அங்கே உன்னை நம்பாதவன் 45% பேர் உள்ளான் என்று பொருள். அங்கே 55% பேர் சாதியால் பிளவுபட்டு ,தமிழுணர்வற்று கிடக்கிறான் என்று பொருள். இதைத்தான் தேனீ ஒரே சொற்றொடரால் சொன்னார். நீங்கள் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இன்றைய இளம் தமிழியவாதிகளுக்கு வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருப்பதில்லை. எங்களின் ஆதங்களுக்குப் பின்னால் இருக்கும் தமிழ் இனமான உணர்வை உங்களால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. தூற்றுகிறீர்கள். உங்கள் வாத வசதிக்காக சரித்திர உண்மைகளை மறுதலிக்கிறீர்கள். பெரியவர்களின் வார்த்தைகளின் பின்னால் பொருள்பொதிந்த ஏதாவது ஒன்று இருக்குமே என்ற எண்ணமில்லாமல், இவர்கள் காலாவதியானவர்கள்… கவைக்குதவாத பேச்சு இவர்களின் பேச்சு… வேகமில்லாதாதுகள்… என்று எம்மை விட்டு விலகியோடி தமிழியம் காணத் துடிக்கிறீர்கள். பெரியாரியத்தின் துனையில்லாமல், நாகரிகமான ஒரு இறைக்கொள்கை இல்லாமல் எக்காலத்திலும் தமிழியம் என்பது எட்டாக் கனியே! குறிப்பு:- இறை மறுப்பு என்பது பெரியாரின் தனிப்பட்ட கருத்து. நாகரிகமான, தமிழனுக்குக் கேடு விளைவிக்காத ஓர் இறையாளனுக்கு பெரியார் எதிரியல்லர்.
தமிழர் நந்தா, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டி அறையும் என்ற சொல்ல பக்குவம் உள்ளவன் நான். இருந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள உண்மை நிலையை எடுத்துச் சொன்னேன். அதைப் புரிந்துக் கொள்ள தங்களுக்கு பக்குவம் இல்லை என்றே தெரிகின்றது.
தனி படை…சொறி படை…என்று பல பதிவு பெறாத அமைப்பு ..ஒவொரு …நிகழ்வுக்கும் இப்படி பெயர் வைத்து கொள்ளும் தனிநபர்கள் கேட்டால்…என் பின்னல் தமிழர் கூட்டமே உள்ளது என்பர்கள் சில பேர் அதில் காசு வசூல் வேட்டை …அனைவருக்கும் { ஒரே நண்பர்கள் ].உணவகங்களில் பத்திரிகை சந்திப்பு …press conference என்ற பெயரில் ….பிறகு அதோடு முடிந்தது ..கேட்டால் …இனிமேல் மக்கள் பிரச்னை …மனு கொடுத்தாய் விட்டது……..என் பெயருக்கு பின்னல் இனிமேல் வரிசை போட்டு கொள்வேன் அமைப்பு பெயர்களை…….இப்படிதான்…போட்டுகொல்வேன்….ஓடுவது யார்…தமிழன தமிளன…
உ. ப ….போய்…உப்பு மா சாப்பிடு நன்றாய்…இருக்கும் சீனி சேர்த்தல் சுவை மிகும் ..மிளகாய் வெட்டி காரம் சேர்த்தால்..சிறப்பு…வெட்டி பேச்சு எழுதி மலேசியா இந்தியர்களை கூறு போட்டு…மாநாடு நடத்தி வசூல் வேட்டை ..செய்தது போதும் பார்பனன் திராவிடன் தமிழ் நாட்டோடு போகட்டும் ….இங்கு நீ கொண்டுவந்து எங்களை பிரித்து ..புனர்..சுகம் தேடாதே ….நீ என்ன பருப்ப
ஒரு லட்சத்து எழுபதாயிரம் ஈழ மக்கள், கொலையுண்டு மரணித்ததை வேடிக்கை மட்டும் பார்க்கவைத்தது இந்த இன அழிப்பு கொலைக்கு துணை போன திருட்டு திராவிடத்துக்கு , ”மனோன்மணிய சுந்தரன்” இப்பொழுது என்ன பதில் சொல்வான் திருட்டு திராவிடரே ? திராவிடத்தையும் வெங்காய பெரியாரையும் மலேசிய நாட்டில் தூக்கி பிடிப்பவன் தெலுங்கர் மட்டும்தான் என்று உணர்வாதவன் நான் இல்லை ! ( இன்னும் சில கேன தமிழர்கள் திராவிடத்தில் இருக்கிறார்கள் ) எனக்கு என்ன ஆதரவு கிடைகிறது என்று நான் கருத்து சொல்லவில்லை வரவில்லை , உன்னை போன்ற திருட்டு திராவிடர்களின் வலையில் சிக்காமல், எம் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வருவதே என் நோக்கம் ! இன்னொரு இன அழிப்பு உலகில் நடக்காமல் தடுப்பதே உலக தமிழனின் தலையாய கடமையும் கூட ! என் இனத்துக்கு கருத்து சொன்னால் கை கால் இருக்காது என்று சொன்ன தேனீ அவர்கள் திடீர் என்று இயேசு பெருமான் போன்று பேச தொடங்கி விட்டார் ! அது எப்படி தேனீ அவர்களே இந்த பக்கத்திலேயே தீவீரவாதி போல் கருத்து சொல்லிவிட்டு , உடனே ஆன்மீகவாதி போன்று கருத்து சொல்கிறீர் ? இதுதான் பல்டி என்பார்களோ ?
உதயகுமார்! வரலாறு யாருக்கு தெரியாது உனக்கா? எனக்கா? நீ பாட்டிலே இருந்து புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா? எடுத்ததுக்கெல்லாம் தமிழ் நாட்டிலே இது முடியாது அது முடியாதுன்னு தொட நடுங்கரிங்களே அதுக்கு இந்த MGR பாட்டு.MGR யாரை அண்ணா பயன்படுத்திகிட்டார் அதுதான் உண்மை.அப்படின்னு அண்ணாவே சொல்லியிருக்காரு! “நான் கூட்டத்துக்கு போனனா அங்கு ஆளே இருக்காது அதுவே தம்பி ராமச்சந்திரன் வந்தால் கூட்டம் அலை அலை இருக்கும்ன்னு” திராவிடத்தை MGR தலை மேலே தூக்கி வச்சு ஆடியிருந்தா அவரு கட்சிக்கு ரெட்டை இலை சின்னம் வந்துருக்காது வெறும் கருப்பு துண்டு மட்டும் இருந்திருக்கும்! ரெட்டை இலை எப்படி எங்கேயிருந்து வந்துச்சுன்னு தெரியும்லே?
குறிப்பு : ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம் . இந்த கட்டுரையை மக்கள் கருத்து பதிவில் புதிதாக பதிக்கவும். இங்கே வந்து குவிந்த கருத்துகளின் கணிப்பில் இந்த முடிவை கட்டுரையாக எழுதி உள்ளேன் நன்றி.
” மலேசியத தமிழனின் பார்வையில் “தமிழர் நாட்டை தமிழர் ஆள கடசித்தீர்வு?
—————————————————————
12 கோடி தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் 8 கோடி தமிழர்கள். இதில் 1 கோடி நாடு கடந்து வாழும் கடல் தாண்டி தமிழர்களாம் . மீதமுள்ள 1 கோடியர்கள் தமிழரல்லாத( தமிழன் போல) திராவிடர்கள்., மீதமுள்ள 1 கோடியர்கள் திராவிட குழும வந்தேறிகலாம். அதற்கு அடுத்து இனொரு 1/2 கோடி வட நாட்டின் இந்தியர்கள். இதில் நேப்பால நாட்டு இந்துகளும் அடங்குவர். கடைசியாக எதிலும் அடங்காத 1/2 கோடி ஆரிய கூட்டங்கள்.
தமிழ் நாட்டை இதுகாலம் திராவிடர்கள்தாம் ஆண்டனர். காரணம் தமிழ் நாடு என்பது மொழி சார்த்த பெயர். இதில் யார் வேண்டுமானாலும் மேயலாம் என்பது தமிழ நாட்டில் மட்டும்தான் நடக்கும்.தமிழர் நாடு என்ற இனம் சார்த்த உரிமையை பெறும் வரை எந்த எலிகளும் தமிழ் நாட்டில் அரசியல் ஓட்டை போடலாம்.
தமிழ் திராவிடன் என்று சொல்ல காமராஜர் மட்டும் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆண்டார்.அதற்குமேல் இதர திராவிட வந்தேறிகள் கூட்டம் அவரை ஆள விடவில்லை. இதிலே ஆரிய கூட்டமும், வந்தேறிகள் கூட்டணியில் தமிழர்களை அடக்கி திராவிடம் மாயையில் தமிழர்களை ஜாதி பிரித்து பலவீனபடுத்தி இன்றுவரை தமிழ் நாட்டில் அரசியல், அரசு சாம்ராஜம் செய்கின்றனர்.
தமிழகம் வந்தேறிகளின் வேட்டை காடாகிவிட்டதற்கு இதற்குமேலும் சான்றுகள் வேண்டுமோ? பெரியார் அரசியலுக்கு வராமல் அப்பால் நின்று திட்டமிட்டு ஏவி விட்டு வந்தேறி திராவிட கலப்பர்களை தலையில் சுமந்தாரோ, அன்றே தமிழக தமிழர்களுக்கு துரோகம் ஆரம்பம்மானது.
தமிழர்களின் வளங்களை ,உரிமைகளை,வணிகங்களை ஆட்சி வலையில் சிக்கவைத்து தமிழர்களின் வசூல்களில் “திராவிடத்தை நிரப்பி ” தெலுங்கர் வீரமணியிடம்தான் கொடுத்தார்.” தமிழ் நாட்டை ஆள்வதே எங்கள் குலத்தொழில்” என்று வந்தேறி வடுகர்கள் சொல்லுமளவிற்கு இன்றுவரை தமிழ் நாடு வந்தேறிகள் திராவிட கோட்டையாக தள்ளப்பட்டுள்ளது.
“என் கட்சி தோற்றாலும் திராவிட சாம்ராஜம் தொடரும்” என்பதில் பெரியாரின், கருணாநிதியின் அரசியல் கொள்கை இதுவரை தமிழர்கள் அறியாமலே ஏமாற்றி வருகிறது. கனடா தமிழச்சி பிராமின செயலலிதா ஆளுவதும் இந்த நியதியில்தான் ! அதிலும் அண்ணா திராவிடம் என்ற கட்சிதான். ஆனால் ஓட்டுப போட்டு தூக்கி வைப்பது தமிழர் நாட்டு தமிழர்கள்தாம் என்பதை யாவரும் அறிவோம். இந்த அளவுக்கு தமிழர்களின் அறியாமை “சிறப்பு ” நன்கு ஆய்ந்தவர்கள் இந்த வந்தேறிகள் கூடாரத்தின் நிரந்திர படலம்.
எந்த தமிழனும் தமிழ் நாட்டை ஆளமுடியாமல் போகிறது. எப்படிப்பாத்தாலும் வந்தேறிகள் கூட்டம். தமிழனை திராவிடன் பிரிவினை கட்சிரீதியாக பிரித்து, தமிழனல்லாத திராவிடந்தான் தமிழர் நாட்டை இன்றுவரை “வந்தேறி திராவிடன்” கட்சிகள் அமைத்து சதி செய்துக்கொண்டான்.
மக்கள் தலைவன் M G R கூட தெரிந்தோ, தெரியாமலோ இதைதான் செய்துதான். தமிழர்களை மேலும் பிரித்து செயலலிதாவை அமர்த்தினார்.திமுகா தோற்றாலும் ஒரு அதிமுகவோ,ஒரு தேமுதிகாவோ அல்லது மதிமுகவோ உண்டு என்பதை மிக சாதுரியமாக வந்தேறிகள் திட்டமிட்டு தமிழர்களின் ரசத்தையும்,குரிதியையும் குடித்து வாழ்தால் சரி என்ற தீர்வை தமிழர்கள் இன்றும் உணராமல் உள்ளனர். சீறி எழுந்த சிலர் மீண்டும் திராவிட சட்டியில் வெந்தனர்.திராவிடம் இல்லாத தமிழ் இனமா? என்ற கேள்விக்கும் தமிழரில்லாத திராவிடமா என்ற வழக்குக்கும் இன்னும் பதில் இல்லை என்பதால் தமிழரில்லாத தமிழகமா ?
“தமிழ் நாட்டை தமிழன் ஆள்வதற்கு எந்த தமிழன் உள்ளான்? “என்று கூட பெரியார் தமிழர்களை பார்த்து கேள்வி கேட்டுள்ளார் என்பது வரலாறு. தமிழர்களின் அறியாமையால் திராவிட புழுக்களாக தன் சொந்த மண்ணில் துளை செய்து செத்து தொலைய காரணம் வந்தேறிகளின் “தமிழ் மொழி இலக்கிய” அரசியல் வசை வசனங்கள்தாம் காரணம்.
தமிழில் எந்த ஊர் இதர நாய் பேசினாலும் உடனே “நன்றி மறவா” பாசத்தில் தமிழன் மயங்கி வந்தேறிகள கூட சேர்ந்து தன் இனத்தையே எதிர்த்து ஊர்வர விடாமல் கடிப்பான்.
தமிழன் கெட்டது அவர் ஊரானுக்கு கற்று தந்த “தமிழ்தான் காரணம் ” இனத்துக்கு இனம் என்று தமிழில் வடுகர்கள் வம்படி பேசியதை தமிழன் நம்பி, நமக்குதான் என்று எண்ணி ஏமாந்தான். இன்றும் அதுதான் நிலை. தமிழக தமிழர்கள் தான் தமிழன் என்ற உரிமை கூட தெரியாமல் திராவிடன் என்னும் அளவுக்கு மொழியால் மயங்கிய மந்திகலாக உள்ளான். (இந்த நிலை இப்போது கடந்த 5 ஆண்டுகளாக சிறுக மாறுகிறது என்பதில் நமக்கு மகிழ்ச்சிதான்)
“இயக்கத்திற்கு உழைத்தது போதும். இனி இனத்துக்கு உழையுங்கள்” என்று தமிழக முன்னாள் அமைச்சர் நேரு ரெட்டியார் அறைகூவல் விடுத்ததை தமிழர்கள் தங்களுக்கு என்று தவறாக புரிந்தனர். ஆனால் அவர் விடுத்த சொல்லாக்கம் ரெட்டியார்கள், தெலுங்கர்கள் ஊக்கம் பெற என்பதை எந்த தமிழனும் அறியான். “நம்ம ஆளு என்றால் பேசு” என்ற இவனின் அரசு முறுக்கலும் தமிழன் தலையில் மிளகாய் அரைத்த கதைதான்.
பெரியார் பர்ப்பாநியத்தை எதிர்த்தார் என்பார்கள். ஆனால் அவர் மட்டும் தெலுக்கு பிராமணராc ராஜாஜியோடு மிகுந்த நல்லுறவு வைதுகொண்டவர்.தமிழ் கழக தோழர்கள் இவரை நம்பி தமிழர் சொத்துக்களை அள்ளி அள்ளி கொடுத்தார்கள்.ஆனால் அவரோ பிறங்கடையாக ஒரு மணியம்மையை துணையாக்கினார்.
இதுதான் திராவிடத்தின் உள்ளடக்கம்.
தமிழில் பேசி தமிழனை எரித்து அதுகள் வளர்த்துக்கொள்ளும். இப்படிதான் தமிழர்களை எரித்து தமிழர்களுக்குள் எதிரிகளாக்கி, பெரியாரும்,அண்ணாவும்,கருணாநிதியும் , வைகோவும் இவர்களைப போன்ற மற்ற வந்தேறிகள் திராவிட கொட்டங்களும் செய்து வருகின்றன.
தமிழர்களை ஏய்ப்பது என்பதில் பெரியாருக்கும் ,அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரு சரியான புரிதல் இருந்தது. இதில் அப்பாவி தமிழர் காமராஜர் ஏமாந்து தோற்றுப்போனார். தமிழர்களை காக்க MGR எடுத்த அதிமுகாவும் பிறகு பிராமரர்களின் வசப்பில் செயலலிதாவும் தமிழர்கள் வார்ப்பில் தன் குல அரசியலை இப்போது நடத்துகிறார்.
அண்மையில் செயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் நடந்த சட்டமன்ற மோதலை தமிழர்கள் விறுவிறுப்பாக பார்த்தனர். பெரியார் வழி அண்ணா ,அண்ணா வழி கருணாநிதி ,கருணாநிதி வழிதான், வைக்கோ, MGR ,அதுக்குப்பிறகு செயலலிதா இவர்கள் இப்போது அரசியலில் ஒரு இரவல் கசப்பில், பிசப்பில் இருந்தாலும் இவர்களின் முறுக்கேறிய எண்ணம் தமிழர்களை, தமிழர் நாட்டில் அரசு ஆள விடக்கூடாது என்பதுதான் உண்மை.
வந்தேறிகள் நமது தமிழ் மொழி ஊசிகளை வைத்தே தமிழில் வெறும் வெற்று புரட்சி (பேச்சுக்களை) ஊசிகள் போட்டு தமிழர்களை திராவிட குருடர்களாக்கிய மாயை இன்றளவும் வென்று,நின்று உள்ளது.
நான் இங்கு இந்த வந்தேறி திராவிடர்கள் ஈழத்தமிழர்கள் சிரத்தை யில் ஏய்த்த அரசியல் அல்லது வியாபார சிக்கலை கையில் எடுக்க வில்லை. அது இன்னொரு திராவிட அரசியல், ஏமாற்று விந்தைகள்.காலங்கடத்தும் ஏப்பம்தான்.
அத்தோடு கையில் ஆகாத தமிழர் நாட்டு “தமிழ் தேசிய சிந்தனை” தலைவர்களும் ஒரு உலப்பல் நாடகம் ஆடி வருவதால் கீழ் படுத்து துப்பிக்கொள்ளும் நிலை எமக்கு வேக்கக்கேடுதான். அதை சொல்லாவிட்டால் என் பதிவுக்கும் கேவலம்தான் !
தமிழ் ஈழ தொடர் சீரியலில் வைக்கோவுக்கு “அதிக” நாடக வித்வான் என்ற பட்டம் தரலாம். காரணம் அவருடைய கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த காலம். அமைச்சர்களும் இருந்தார்கள், தமிழ் ஈழ சிக்கலுக்கு என்ன செய்தார்? பச்சோந்தித்தனம் இன்று வரை தமிழர்கள் மெச்சிக்க அரசியல் இயலாமை தமிழாடல் மட்டும் கருவாடு நாத்தம்.
அதிகாவுடன் கூட்டே இல்லை என்று தன் தாயின் தலைமீது சத்தியம் என்றவர் மூன்றே நாளில் அந்த திரை தாரைகையோடு கை கோர்த்து வளம் வந்தார். ஈழம் பேசுவதோடு போச்சி. மறந்தார் மறந்தார்.
இப்படியாக தமிழர் நாட்டில் நாரதர் கூட்டம் அரசியல் வேசிகளாக இருக்கையில், என் தமிழ் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்று நீங்கள் கேற்பதை உணர்கிறேன்.
எனக்கு தெரிந்த இக்காலத்து மூத்தவர் பல நெடுமாறன் , ஜாதி பைத்தியம் ராமதாஸ் , முதலில் தமிழ் ஈழம், பிறகு தமிழ் நாடு மட்டும் பேசும் சீமான், தொல் திருமாலவன் ,தமிழர் களம் அரிமாவளவன் இவர்கள் ஒன்று கூடும் நாள் இல்லை என்றே சொல்வேன். தெளிவான நோக்கமும் அரசியல் இலக்கு இல்லாமல், ஏன் இந்த அரசியல் ராஜாங்கத்தில் ஓடும்பிள்ளை கூட்டம்?
இவர்களின் அரசியல் இயலாமை தமிழர்களை நகரத்தில் கூட ஒன்று சேர்க்காது. இதற்கு என்னதான் தீர்வு?
இடையில் ஒடிந்த ராமதாஸ் , அரிமாவளவன் தவிர திராவட பாசையில் ஊறிய மிஞ்சியவர்கள் தமிழர் நாட்டின் “தமிழர் திராவிட சிந்தனையை” கையில் ஏந்தினால் என்ன குறைந்தா போவார்கள்? 100 ஆண்டுகளாக தமிழை , தமிழ் மக்களை வைத்து வந்தேறிகள் திராவிடத்தில் மேய்ந்தவர்கள் வழியே நாமும் அரசியல் நடத்தினால் என்னவாம் ? என்ற தீர்வோடு ” தமிழர் திராவிட அரசியல்” அமைப்பே தமிழன் ஆள முடிவான கடைசி முடிவு என்று இதுவே தமிழர் நாட்டை தமிழர்கள் வென்று வர முடியும்.
உலகத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் இந்தியன் பட்டியலிலிருந்தும், வந்தேறிகளின் திராவிடன் பிடியலிருந்து வெளி வந்து “தமிழர் நாட்டு தமிழர் திராவிடம்” அமைத்து அரசியல் தந்திரம் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை !
தமிழ் மாநிலம் ஒரு புதிய அரசு அமைப்பில் தனி நாடாக “தமிழர் நாடு” எனும் குடியரசாக மாறும் வரை திராவிட மச்சம் மாறது என்பேன். இது நடக்க இந்தியாவின் 29 மாநில ஆட்சிகளும் தனி நாடுகளாக மாறும் காலம் இன்னும் 50 ஆண்டுகளில் உலக நடப்பில் சாத்தியமே !
தமிழ் நாட்டில் புதிய தமிழர் சார்பு கட்சிகள் தமிழர் தேசிய சிந்தனையில் உருமாற்று தலைவர்கள் ,இளைஞர்கள் தமிழன் அரசியல் நகர்வுகளை இப்போதே கையில் ஏந்தினால் வெற்றிப்பெறலாம் .ஒரு வேளை “நாம் தமிழர்” கலப்பில்லாமல் தமிழர் நாடு அரசியலை வென்று அரசு முன்னுரிமையில் தமிழ் ஈழத்துக்கு உரமிட்டால் தமிழன் இரண்டு தண்டவாள பாதையில் ஒரு தமிழர் நாட்டையும் தமிழீழ இலக்கை அடையும். இனம் உருப்படும்.
தமிழர் நாடு எனும் அடிப்படை உரிமை இல்லாமல் இருட்டில் மேடை வசனம் பேசுவது கண்ணை மூடிக்கொண்டு அம்பு விடுவது போல காலத்தை ஏய்க்கும் ஏலம்தான்.
ம, ஆ. பொன் ரங்கன்
இயக்குநர், உலகத்தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
நந்தனே… திராவிடம் என்று ஒன்று இல்லை என்றீர். தமிழ்ப்புலவன் இல்லாத திராவிடத்தை எப்படித் தன் பாட்டில் குறிப்பிட்டிருக்க முடியும் என்றேன். இப்போதோ… ஈழத்தமிழர் கொலைக்குத் துனைபோன திருட்டு திராவிடத்துக்கு மனோன்மணிய சுந்தரன் என்ன பதில் சொல்வான் என்று பல்டியடித்து வேறு ஒரு கேள்வியை முன் வைக்கிறீர். இதைத்தான் குரங்குத் தாவல் என்பது. முதல் கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாத நீர் எதிர்கேள்வி கேட்கும் தகுதியை எங்கு பெற்றீர்? வாதத்தை திசை திருப்பும் நீர் வெட்டித்தனமாக கூச்சலிடக்கூடாது. இந்த சுந்தரனின் பாடலைத் தமிழகப் பள்ளிகளில் பயிலும் எல்லா தமிழ் மாணவர்களும் தினமும் தமிழ்தாய் வாழ்த்தாகப் படித்துவிட்டுத்தான் பாடங்களைக் கற்றுக்கொள்கின்றனர். நீர் மட்டும் இங்கே காட்டுக்கூச்சல் போட்டு ஆரியனும் திராவிடனும் ஒன்னு இதை அறியாத தமிழன் வாயில் விழுந்தது மண்ணு என்று தாண்டவக்கோனே மெட்டில் பாட்டுப்பாடிக்கொண்டிரு.
திராவிடம் லட்சக் கணக்கான மிசாயில்களையும், கனரக பீரங்கிகளையும், விமானப் படையையும் அனுப்பி ஈழத்தமிழனைக் கொன்றது. தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்படித்தானே…? உமக்கெல்லாம் கோபம் வந்தால் தலையில் உள்ளது வேலை செய்யாதா? கத்துவதால் நீர் பேசுவது எதுவும் உண்மையாகிவிடாது. அது சரி, போர் நடந்தபோது நீ எங்கே இருந்தாய் நந்தா? இப்படி வீர வசனம் பேசும் நீ ஈழத்திற்குப் போய் ஏன் போர் புரியவில்லை? வவுனியா காடு உன்னை வரவேற்கவில்லையா? அல்லது முள்ளி வாய்க்காலுக்குப் பாதை தெரியவில்லையா? நாங்கள்தான் பெட்டைகள்… தொடை நடுங்கிகள்.. சிங்களனைக் கண்டாலே கால்வழியே மூத்திரம் கழிப்பவர்கள்… திராவிடத் திருடர்கள்… வானத்தில் கூடாரம் அமைத்து வியாழன் கிரத்திற்கு ராக்கெட் விட்டுக்கொண்டிருந்த தமிழனின் கால்களைப் பிடித்து கீழே இழுத்துவிட்டு படுகுழியில் தள்ளி தமிழனின் வாழ்க்கையைச் சீரழித்தவர்கள். நீர்தான் உலகத்தையே உன் கைகளில் சிறைபிடித்து வைத்திருந்த மூவ்வேந்தன் பரம்பரை ஆயிற்றே சிங்களவனை துவசம் செய்துவிட்டு , சிங்கவனின் இரத்தச் சேற்றிலே குளித்துவிட்டு, இதோ பாரடா ஈன திராவிடனே…என் வீரத்தைப் பார் ! சிங்களனின் உடலற்றத் தலைகளைப் பந்தாடிய அழகைப் பார்! என்று வீரக் குரல் எழுப்பவேண்டியதுதானே. யார் உன்கால்களைக் கட்டிப் போட்டது? யார் உன் வீரத்திற்கு தடைபோட்டது? யார் உன் ரத்தத்தின் சூட்டைக் குளிர்வித்தது? திராவிடமா…? திராவிடமா…? திராவிடமா உன் கையைப் பிடித்து கட்டிப்போட்டது? நந்தனே… எங்காவது வெட்டிப்பயல்கள் வேலையற்றுக் காப்பிக் கடையிலே ஓசியில் தண்ணீர் போட்டுக்கொண்டு நான்கு நம்பர் விளையாடிக்கொண்டிருப்பான் அவனிடம் போய்ச் சொல் உன் கதையை!
இன்று பொன் ரங்கன் கொஞ்சம் சிந்திக்கும் அளவில் கருத்து எழுதியுள்ளார். நன்றி.
திராவிடனே மீண்டும் உன் திருட்டு பேச்சை தொடங்காதே ! மேலே இருக்கும் பொன் ரங்கனின் கருத்தை படித்து விட்டு வா ! தேனீ திருந்தியதுபோல் இருக்கிறார் ! நல்ல மாற்றம் ! அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திருட்டு திராவிடர் கொள்கையடா ! வீரர்கள் வாழும் திருட்டு திராவிடர் நாட்டை வென்றவர் கிடையாது என்ற பாடல் எல்லாம் கேட்டு தமிழன் ஏமாந்து விட்டான் !
திருட்டு திராவிடனே ! உன் மொழி என்ன ? உனது கலாசாரம் என்ன ? உன் மண்ணோ மாநிலமோ என்ன ? தமிழர் மத்தியில் திராவிடத்தை கோத்து விட்டு என் மக்களை ஏமாற்றுகிறாய் திருட்டு திராவிடனே !
நந்தா… ஒருவன் ஓரளவிற்கு மெய்பட எழுதினால் அதற்கு ஒப்புதல் அளிப்பதைப் பார்த்து தேனீ எப்போதோ சாக்கடையில் வீழ்ந்து கிடந்ததைப் போலவும் இப்போது அறிவு விளக்கம் பெற்று திருந்தியதாகவும் விளக்கம் தர முற்படாதே! ஏற்புடையதை யார் சொன்னாலும் ஆழ்ந்து சிந்திப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பொன் ரங்கன் உண்மையைச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள எனக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஆனால் உம்மைப் போல விதண்டாவாதப் பேர்வழியல்லன் நான். நல்ல தமிழன் ,உண்மையான தமிழனின் பண்பு அடுத்தவனை திட்டுவதல்ல என்பதை புரிந்துகொள். புத்தகத்தைப் படித்து பொது அறிவைப் பெருக்கிக்கொள்ளத் தெரியாத கருத்துப்பிழைகள் என்னைப் பார்த்து அதைப்படி இதைப்படி என்று பாடம் நடத்த முற்படுவது அறிவீனம். உம்மைப் போன்ற அரைகுறைகள் ஆழமான கருத்துக் களத்தின் பக்கம் வந்து தங்களின் வெறுமையைக் காட்டவிவாதமேடைபக்கமே வந்திருக்கக் கூடாது. படித்தவர்கள் சபையிலே பண்பற்றதுகளும் சபை ஒழுக்கம் அறியாததுகளும் வர அச்சப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் கீழ்களது ஆச்சாரம் என்று ஆன பிறகு யார் என்ன செய்ய முடியும்!!!!? ” புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார்” எனும் குறளினை உள்வாங்கிக் கொள்ளாது உம்மைப் போன்றோர் உள்ள அவையில் நான் வாதிட்டது என் தவறே!
பெரியாச்சாமி [ பெரியசாமி ] அவர்களே இப்பவும் நீங்கள் எழுதியது திராவிடம் தானே , [ எம் ஜி ஆர் ] என்ற மூன்றெலுத்தின் ,சகாப்தம் தொடங்கியது [ அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தானே ], நடுங்குகிறோம் ,நடுங்கவில்லையே ,நடைமுறையை சொல்கின்றோம் ,நடபினையை சொல்கின்றோம் ,கருப்பு துண்டின் சகாப்தம் தானே ,பொன்மான செம்மலையும் தூக்கி நிமிர்த்தியது ,இருபத்தி ஐந்து ஆண்டுகாலம் ஆண்டது திராவிடம் தானே ,சுமந்ததும் தமிழ் இனம் தானே ,தமிழ் நாட்டில் தமிழன் திராவிடத்தால் வாழ்ந்தானா ,இல்லை வீழ்ந்தானா ,விடை சொல்லுமா தமிழ் இனம் ,ஈழத்தின் பாதையில் பயணிப்பதால் விலகி நிக்கின்றோம் முழுமையின் விவாதத்தில் ,என் வண்டியின் வாசகம் கண்டு ,நாம் தமிழர் சகாக்களின் வணக்கம் கண்டு மனம் மகிழ்ந்தோமே ,தமிழன் மாட்சி பெற , திருட்டு திராவிடன் ,ஆம் தமிழர் மனதை திருடிய திராவிடன் ,திருந்தா தமிழனை திருத்தும் திராவிடன் ,தமிழ் இனத்தை சுமக்கும் திராவிடன் ,ஈழத்தை வெற்றிப் பாதையை நோக்கி கொண்டு சென்ற திராவிடன் , ஈழத்தின் அடிவாரத்தின் நங்குறமிட்ட திராவிடன் ,[ பிரபாகரன் ] என்ற தமிழ் சரித்திரத்திற்கு ஆயுத பாகம் தந்த திராவிடன் ,ஆடைகள் தயாரித்து தந்த திராவிடன் ,வாழும் காலத்தில் சிறையின் கதவின் பின்னால் இருந்த திராவிடன் , மலேசிய மண்ணில் , மறந்த திராவிடம் , மறுத்த திராவிடம், தமிழன் அவர்களால் பதியம் செய்யப்பட்டதே , தமிழ் இனம் தழைக்க சந்தனம் குழைத்த பன்னீர் கொண்டு அண்ணன் திராவிடன் அவர்களாலும் ,தமிழ் தேனுக்கு சொந்தமாம் தேனீ அவர்களால் தெளிக்கப்பட்டதே தமிழ் இனத்தின் வளமை பாதைக்காக , தமிழர் நாடு இணைப்பு பாதையின் முழுமையில்லா சுவடுகள் கொண்டு சுமப்பவர் யார் ,இணைவோம் தமிழர்களாக ஈழத்தின் முழுமைக்காக ,இணைவோம் தமிழர்களாக, தமிழர்கள் முன்னேற்றத்திற்க்காக , இணைவோம் தமிழர்களாக, திராவிடத்தை மறந்தல்ல ,மறுத்தல்ல , இணைவோம் தமிழர்களாக சுமந்த திராவிடத்தை வீழ்த்துவதற்கு அல்ல , இணைவோம் நாம் தமிழர்களாக ,நாம் தமிழர் கட்சி வளர்ப்பதற்கு அல்ல ,தமிழர் வளர்ச்சிக்கு , இணைவோம் தமிழர்களாக தமிழ் ஈழம் மலர்வதற்காக , [ மலரட்டும் தமிழ் ஈழம் ]
தமிழர் நாடு எனும் தீ ஆதியிலிருந்து நம்மரிடையே இருந்ததை பெரியார் நன்கு அறிந்து வைத்திருந்தது பார்பனியாதிற்கு எதிரான திராவிட போரில் எண்ணையை ஊற்றி குளிர் காய்ந்தது மட்டுமே உண்மை.அது ஒரு திட்டமிட்ட சதி என்பதால்
வந்தேறிகளே அதில் ஆக்கிரமிப்பு கொண்டிருந்தனர்.நாளடைவில் திராவிடம் காட்டு தீயாக உருவெடுத்து தமிழனை தமிழ் மண்ணிலே இரண்டம் தர குடிமகனாக மாற்றிவிட்ட துயரத்தை நாம் கண்கூடாக காண்கிறோம்.பொன் ரங்கன் கருத்தில் பல உண்மைகள் இருந்தாலும் தமிழர் நாடு எனும் தீ என்றும் பிரகாசிக்க பிரணாவாயுவை இருட்டிலாவது மேடை வசனம் பேசி முடிந்தவரை தமிழனுக்கு வழங்கி வருகிறேன்.கண்ணை முடிக்கொண்டு அம்பு விட்டதில்லை இனி அதையும் முயற்சி செய்து பார்கிறேன்; நன்றி இயக்குனர் அவர்களே!
MGR இல்லையேல் விடுதலை புலிகள் அதரவு பெற்றிருக்க முடியாது …அவர் செய்த உதவிகள் தமிழர்கள் செய்திடவில்லை …நமக்கு முக்கியம் மனித நேயம்….திராவிடர் தமிழர் என்று மலேசியா இந்தியரை பிரிந்து புணர் சுகம் காண நினைப்பது ..தேவை இல்லை ….தமிழ் பள்ளிகளில் இன்று தமிழர் அல்லாதவரும் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் ரவாங் பகுதில் நேபாளிகளும் அனுப்புகிறார்கள் …
தமிழ் மொழி வாழ…விழா..எடுங்கள் நாங்கள் உ. ப .த பொன் அவர்களுக்கு அதரவு தருகிறோம் …அதைவிட்டு விட்டு ஒரு நாள் கூத்தோடு கடை முடு விழா அதன் பின் திட்ட அறிக்கை ….நகர்வு கள்…[follow -up action } இல்லை இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி …ஆடல் பாடல் கொண்டாட்டம் ….த .ப …சிரிப்புதான் வருதுங்கோ…
நல்லவங்களே வணங்கறது தமிழன் மரபு! ஆட்சியிலே நீதியை
வாழவச்ச MGR ஏழைங்களையும் வழ வச்சாரு! MGR திராவிடம் வேற பெரியாறு திராவிடம் வேற,ரெண்டையும் ஒன்ன முடிச்சி போடாத!அதனாலதான் அண்ணா திராவிடம்னு பிரிஞ்சது! பிரபாகரனுக்கு கை கொடுத்து உதவியும் செஞ்சாரு! அவர் அரசியலுக்கு வந்த நாளுலே இருந்து இன்னைய வரைக்கும் அவருக்கு எங்க மதிப்பும் மரியாதையும் இருக்கு! அதை நீ என்ன சொல்றது?
தம்பி உதயகுமார்… நமது அறிஞர் அண்ணா சொல்வார்,
” பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன சடலத்திற்கு மருந்து ஊட்டும் செயலாகும்”
சரியாய் சொன்னார் பெரியசாமி ……..உ. ப த ….எங்கே ஓடி ஒளிந்தீர் ……பொய் சௌகிட்……பக்கம் என்ன வேலை…
சரியாய் சொன்னார் பெரியசாமி ,ஆம் சரியாகத்தானே சொன்னார் ,அஸ்திவாரமாக இருந்தாலும் , கிளைகளாக இருந்தாலும் திராவிடம் ,திராவிடம் தானே மாறுபட்ட காலங்களில் மாறிவருமே, நல்லவங்களை வணங்குகிறது தமிழன் மரபு இதைத் தானே நாங்களும் கூறினோம் , இது தானே தலைப்பு செய்தி , மருந்து என்னும் மாண்பை ஊட்டிவிட்டோமே அண்ணா எங்கள் அண்ணா , [ திராவிட அண்ணா ] [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
இதோ பாருங்கப்பா நான் திராவிட கழகத்தாருக்கு எதிரியும் அல்ல, நண்பனும் அல்ல. பொதுவாக இருந்து எமது கருத்தைத் தெரிவிப்பதே எமது விருப்பம். ஆனால், இப்பகுதிக்குள் ஒரு சிலர் அண்ணாவையும், பெரியாரையும் அறியாது சிறுபிள்ளைத் தனமாக நேற்று பெய்த மழையில் பூத்த காளான்களாக முளைத்து வெங்காயமாக கருத்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்த காரணத்தினால்தான் கருத்து எழுத முன் வந்தேன். அண்ணாவும், பெரியாரும் வாழ்ந்த காலத்தில், இங்கு வந்த சிறுசுகள் கரு தரிக்கவும் இல்லை, கரு தெரிவிக்கவும் இல்லை. இந்த சிறுசுகள் இன்றைய சூழலை வைத்துக் கொண்டு அதனையே சீர்தூக்கிப் பார்த்து அன்றைய நிலையை அறியாது கருத்து எழுதுவதால் என்ன பயன்?. வள்ளுவன் சொன்னதை புரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் வாழ்ந்த காலத்தின் தளத்தில் நின்று அதன் பொருள் அறிய வேண்டும். அவ்வாறு இல்லாமல் போனதால்தான், இன்று கிறிஸ்துவரும் வள்ளுவனின் வாக்கு விவிலியத்தின் வாக்கு என்று சொல்லி பட்டம் வாங்கிப் போகின்றான். இதே தவற்றைதான் இங்கு வரும் சிலரும் செய்கின்றனர். திராவிடம் தோன்றியது, தென்னகத்தாரை பார்ப்பனின் பிடியில் இருந்து விடுவிப்பதே தலையாய நோக்கமாக கொண்டிருந்தது. அதன் கிளை உருவகங்களாக வந்தது கால வளர்ச்சியில் ஏற்பட்ட மற்ற கொள்கைகள். இந்த திராவிட கொள்கையால் பாதிப்புற்றோர் யார்?. பிராமணர்களும், தமிழ் நாட்டில் வாழும் ‘unscheduled caste’ எனப்படும். தமிழர்களில் பொருளாதாரத்தில் மேம்பட்ட வகுப்பினரும் ஆகும். இவர்களுக்கு சாதகமில்லாத அரசியல் கொள்கை வகுக்கப் பட்டு அதனால் அராசாங்கத் துறையில் கல்வி, வேலை வாய்ப்புக்களை ‘scheduled caste’ எனப்படும் பொருளாதாரத்தில் தாழ்ந்தோரிடம் இழந்தனர். அதனால் வந்த ஆதங்கமே இன்று பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கும் இவர்கள் திராவிடத்தை கொன்றொழிக்க வேண்டும் என்ற வேட்கையில் அரும்பாடு படுகின்றார்கள். இவர்கள் வெற்றிப் பெற்றால், மீண்டும் இத்தகைய தமிழர்கள் பொருளாதாரத்தில் நலிவு பெற்றிருக்கும் தமிழர்களை வேறொரு பெயரில் ஆதிக்கம் செலுத்த தயாராக இருக்கின்றனர். அவர்களுடன் சிறுபான்மையினராகி விட்ட பிராமணரும் சேர்ந்துக் கொண்டு பொருளாதாரத்தில் தாழ்ந்து இருக்கும் தமிழர்களை மேலும் கொட்ட துடியாய் துடிக்கின்றார்கள். தமிழியம் பேசி, திராவிடத்தை தாக்கும் அன்பர்களே, மேலே கூறப்பட்ட நிலையில் தமிழர்கள் மீண்டும் ஆளப் படுவதை நிறுத்துவதில் இருந்து தர்காக்க தங்களில் ஒருவரும் கருத்து தெரிவிக்கவில்லையே?. என்ன ஆச்சரியம் தமிழியம் பேசிய தமிழர்களுக்கு, மழை வருவதற்கு முன் குடை பிடிக்க தெரியவில்லையே?. திராவிட தளத்தில் நின்று நாம் பெற்ற வெற்றியை நிலைக்க வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு தமிழனை உயர்த்த வேண்டிய யுக்தியை மேற்கொள்ளுங்கள். வெறும் தமிழியமும், தமிழர் நாடு என்றும் பேசி ஒருவரை ஒருவர் தூற்றி எழுதுவதில் தமிழர் நிலை உயர்ந்து விடப் போவதில்லை. வேண்டுமானால் மேலும் எழுதுவேன்.
திருட்டு திராவிடனே ! உன் மொழி என்ன ? உனது கலாசாரம் என்ன ? உன் மண்ணோ மாநிலமோ என்ன ? தமிழர் மத்தியில் திராவிடத்தை கோத்து விட்டு என் மக்களை ஏமாற்றுகிறாய் திருட்டு திராவிடனே ! // இதுக்கெல்லாம் பதில் சொல்லாமல் நொண்டி சாக்குடன் ஓடி ஒழியும் திராவிடனே ! நாங்கள் தமிழர்கள் ! குமரிகண்டம் முதல் தென் இந்தியா வரை எங்கள் நாடு, எங்கள் மொழி தமிழ் தாய் மொழி , எங்களுக்கு சங்க இலக்கியங்கள் பல , 20 ஆயிரம் சங்க கால வரலாறு உண்டு ஆசிய கண்டத்தை முக்கால் வாசி ஆண்ட பரம்பரை ! உனக்கென்ன இருக்கு திருட்டு திராவிடரே ? எம் மக்கள் மத்தியில் குழப்பத்தை தவிர வேறு என்ன செய்தாய் திராவிடரே ! இதோடு ஓடு !இல்லை உனக்கு இருக்கிறது சூடு !
போன்றவர் போல் … அதிகமாக இருப்பதால் தமிழனுக்கு இந்த இழி நிலை ! தமிழ் நாட்டில் தமிழனுக்கு அரசாங்க துறையில் வேலை இல்லை என்கிறான் திராவிடனும் ஆரியனும் !
முன்னே திராவிடன் இல்லையென்பதும், பின்னே திருட்டு திராவிடன் என்பதும் முன்பின் கருத்தை அறியா எழுதும் கருத்தாளர்களுக்கு எவ்வாறு பதில் சொல்வது?. திராவிடன் இல்லை என்றால் திருட்டு திராவிடன் எங்கிருந்து வந்தான்?. இதைத்தான் சிறுபிள்ளைத்தனம் என்பது. வளர்ந்து எழுங்கள்.
பிடறியிலே கால்படவே
பின்னோக்கி ஓடுதற்கே
பெற்றெடுக்க வில்லையடா – எனைப்
பெற்றெடுத்த தமிழன்னை…
திண்ணையிலே தூங்கி நிதம்
தெருப்பேச்சு பேசுதற்காய்
வந்தவனும் நானல்லன் உனைப்போல…
சந்தணத்தைச் சேறென்றும்
சாக்கடையைத் தமிழென்றும்
வெந்ததைத் தின்றுவிட்டு
வந்ததைப் பேசுதற்கு
வந்தவனும் நானல்லன்…
அண்ணா எனுமெங்கள்
அறிஞரின் மொழிகேட்டு
ஈரோட்டு வசந்தத்தில் -ஞானத்
தேரோட்டி வந்தவன்யான் …
மனப்பிறழ்சி காரணமாய்
குணப்பிறழ்ச்சிக் காளாகி
பிணமொத்த பிறப்பானாய்
உனைமொத்த நானொன்றும்
வினையற்ற வெட்டியல்லன்…
தினமொன்றைக் கதைக்கின்றாய்
தினெவெடுத்தே அலைகின்றாய்
பனங்கள்ளை அருந்தியதோர்
வனமந்தி யாகிநீயும்
உனைமறந்தே கருத்தின்றி
உளறுகின்றாய் தினந்தினமே!
முத்தென்றே எண்ணிதினம்
மூச்சடக்கி சேற்றினிலே
மலமெடுக்க அழைக்கின்றாய் – நானோ
முத்தமிழில் குளித்துதினம்
முப்பலை அருந்துபவன்
தப்பாமல் வினையாற்றும்
தனமானத் தமிழன்யான் – ஆகவே
அப்பாலே ஓடிவிடு
அடங்காத சாத்தானே!
தேனீ அய்யா, வயலுக்கு நீர் விட்டால் , பயனுண்டு! விழலுக்கு நீர் விட்டால் ……..?மழலைகளுக்கு அ.ஆ, இ ,ஈ என்றால் எளிதாக புரியும். திருக்குறள் என்றால் ……..அதற்கும் ஒரு காலம் வரவேண்டுமே!!!
சகோதரன் தேனியின் நடுநிலையான கருத்தை நான் வரவேற்கிறேன். எல்லோருமே தேனீயைப் போல் புரிந்துணர்வுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாதுதான். பொன்ரங்கனின் கடைசியான பதிவை என்னால் முழுதுமாய் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தமிழினம் தலைநிமிர்ந்து வாழ ஒன்றுபடவேண்டும் எனும் கோரிக்கை நியாயமானதே. வரவேற்ப்போம்.
தம்பி திராவிடனின் கவிதையில் கோபம் கொப்பளித்தாலும் , அவருடைய தமிழின் விளையாட்டும் கவிதை நடையும் என்னை எழுச்சி மிக்க அண்ணாவின் காலத்தை நினைவூட்டுகிறது. தம்பி திராவிடா… புரிந்துகொள்ள ஆர்வம் காட்டாதவர்களுக்காக எழுதுவது வீனென்று அண்ணா சொன்னதை மேற்கோள் காட்டின நீயே மீண்டும் சகதியில் சமர்புரிய வேண்டாம். எல்லாம் எழுதியாகிவிட்டது. நல்ல பொழுதை நல்ல புத்தகங்களப் படிப்பதில் கவனம் செலுத்து. அது உனக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை இல்லாதவர்கள் ஏசட்டும் பேசட்டும். அதற்கெல்லாம் பதில் எழுதவேண்டமே!
தமிழ் நந்தா வரிகள், திருட்டு திராவிடனே உன் மொழி என்ன , உன் கலாசாரம் என்ன ,உன் மண்ணோ மாநிலமோ என்ன ,நாங்கள் தமிழர்கள் ,குமரிக்கண்டம் முதல் தென் இந்தியா வரை எங்கள் நாடு ,எங்கள் மொழி தாய் தமிழ் மொழி ,ஆசிய கண்டத்தை முக்கால் வாசி ஆண்ட பரம்பரை ,இங்கே தமிழ் மக்கள் மட்டுமா வாழ்ந்தார்கள் ,தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் ,துளுவம் ,அனைத்தும் பிணைப்புகள் கொண்டது திராவிடம் , இதுவன்றோ திராவிடம் , ஆண்ட பரம்பரை ஆண்ட வகை தெரியாமல் ,மொத்த சொல்லுக்கும் சொந்தம் ,தனிச்சொல்லை சுமந்தால் எங்கே கிடைக்கும் முழுமை , இனம் சார்ந்த நிலையில் இனமாய் இருக்க வேண்டும் ,ஊனமாய் போய் விடக்கூடாது உண்மையின் முழுமை நோக்கி நகர்வோம் ,[ மலரட்டும் தமிழ் ஈழம் ].
தோழர் உதயக்குமார் ! திருட்டு திராவிடன் தோளில் மேல் கைபோட்டுக்கொண்டு மலரட்டும் தமிழ் ஈழமா ? சுய நினைவில்தான் இருக்கிறீரா ? 170,ooo,00 ஈழ மக்கள் கொலை படுவதை திராவிடனுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்த தமிழக தமிழனா நீ ? திராவிடர் ஆட்சி காலத்தில் ஈழத்துக்கு வந்த சோகத்தை மறந்து விட்டாயா ? அப்படியென்றால் திருட்டு திராவிடன் உன்னை ஆண்டுக்கொண்டு இருக்கிறான் என்று பொருள் ! தேனீ ஏனோ குழப்ப நிலையில் இருக்கிறார் ! தமிழன் என்ற சுய நினைவுக்கு வாருங்கள் ஐயா ! நீங்கள் தமிழர் இல்லையென்றால் இதோடு மறந்து விடுங்கள் ! திருட்டு திராவிடனை விடுவதாக இல்லை !