மலேசியகினிக்கு எதிராக பெர்காசா போலீஸ் புகார்

 

Report Mkமலேசியாகியும் பினாங்கை தளமாகக் கொண்ட அதன் உதவி ஆசிரியர் சூசன் லூனும் போலீசாரின் பெயருக்கு களங்கத்தை உண்டுபண்ணி விட்டனர் என்று அவர்களுக்கு எதிராக 10 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

தங்களை “பினாங்கு மலாய்க்காரர் பிரதிநிதிகளின் கூட்டணி” என்று கூறிக்கொண்ட பெர்காசா மற்றும் 13 இதர அரச சார்பற்ற அமைப்புகள் நேற்று மாலை மணி 6.00 அளவில் பினாங்கு, ஜாலான் பட்டாணி போலீஸ் நிலையத்தில் புகார்களைச் செய்தன.

இப்புகார் கடந்த திங்கள்கிழமை மலேசியாகினி அதன் மலாய்மொழி பகுதியில் வெளியிட்ட “Exco man grilled for four hours, treated like a criminal”, என்ற மலாய் மொழி செய்தி சம்பத்தப்பட்டதாகும். இதனை எழுதியவர் சூசன் லூன்.

பினாங்கு பெர்காசா இளைஞர் பிரிவின் தலைவர் முகமட் ரிஸுவால் முகமட் அஸுடின் கூற்றுப்படி இந்த மலேசியாகினி கட்டுரை “தேச நிந்தனையாகும்.”