சிலாங்கூர் எம்பி பதவிக்கு அஸ்மின் பெயர், மறுக்கிறது பிகேஆர்

 

PKR - Azminசிலாங்கூர் அரண்மனை மாநில எம்பி பதவிக்கு பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாற்றாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கும் என்று ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளை பிகேஆர் மறுத்துள்ளது.

நேற்று, அக்கட்சியின் தலைமைத்துவ மன்றம் இரண்டு முடிவுகளை மட்டுமே எடுத்தது. ஒன்று, அந்த உயர் பதவிக்கு வான் அஸிசாவின் நியமனத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. மற்றொன்று, கிளந்தானில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட கிளந்தான் பிகேஆர் விடுத்துள்ள கோரிக்கை என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசுதியான் இஸ்மாயில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.