தமிழகத்தின் அகதி முகாம்களில் வசித்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் மற்றும் ராணுவத்தினருக்கிடையில் உக்கிரமான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
நீண்ட காலமாக தமிழகத்தின் அகதி முகாம்களில் வசித்த இவர்கள், சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பின் அனுசரணையின் கீழ் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவர்களுக்கான விமான டிக்கட் உள்ளிட்ட ஏற்பாடுகள் அந்த அமைப்பினால் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு நாடு திரும்பிய அகதிகளில் 17 பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

























