மட்டக்களப்பில் இன்னும் சில வருடங்களில் சிறுபான்மையினராகும் தமிழினம்

tamils_001தமிழீழம் என வரைபடக் குறியீட்டுக்குள் உள்ள எட்டு மாவட்டங்களில் திருமலை, அம்பாறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் சிறுபான்மையினராக உள்ளதுடன் கிழக்கின் பெரிய மாவட்டமான மட்டக்களப்பில் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

இவ்வாறு கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மட்டக்களப்பில் நாங்கள் இப்போது மத ரீதியாக சிறுபான்மையினர். தமிழர்கள் இந்து மதம், கிறிஸ்தவ மதம் என்று பிரிந்திருப்பதால் முஸ்லிம்களே மட்டக்களப்பில் மத ரீதியாக பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மையாக இல்லை. தமிழர்களின் தொகை குறைந்து வருகிறது.

மேலும், தப்போது சிங்களக் குடியேற்றங்கள் இல்லாத மாவட்டங்களும், காணி அபகரிப்பு இல்லாத மாவட்டங்களும் வட-கிழக்கில் இல்லை.

எனவே இது குறித்த முயற்சிகளே, மீள் குடியேற்றத்திற்கான புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவே இதற்கு உதவும். இதனை சந்தஞ்சந்தடியில்லாம் பொதுநோக்குள்ள தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல அரிய கருத்துக்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: