தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆட்சி மாற்றம் மட்டும் போதாது! சுரேஸ் எம்.பி

suresh_premachchanthiran_001வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் மட்டும் போதாது என அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி முதல்வர் சிபோன் ஓட் ஜட்ச் தலைமையிலான குழுவினருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் பா.உ. தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் ஒன்றிணை மேற்கொண்டிருக்கும் மேற்படிக் குழு வடமாகாண முதலமைச்சர், வடமாகாண அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்வில் நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்திப்பு தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

சுமார் 2மணிநேரம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போது வடமாகாணத்தில் நிலவும் மீள்குடியேற்றம் தொடர்பில் அவர்களுக்கு அதிகம் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

வடக்கில் 28ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்து படையினர் நிலைகொ ண்டுள்ளனர். அதாவது 10லட்சம் மக்களுக்கு ஒன்றரை லட்சம் படையினர் உள்ளனர்.

ஆனால் இந்த நிலைமை இலங்கையின் மற்றய மாகாணங்களில் இல்லை. எனவே படையினர் இவ்வாறு நிலை கொண்டிருப்பதனால் இந்தியாவில் ஒன்றைரை லட்சம் மக்கள் உட்பட வடக்கில் பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே படையினர் இங்கிருந்து வெளியேற்றப்படவேண்டும். அதுவே மீள்குடியேற்றத்திற்கான முதல் சாதகமான நிலையாகும்.

மேலும் படையினர் இங்கே நிலைகொண்டுள்ளமையினால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை மற்றும் ஜனநாயக தன்மை ஆகியனவும் பாதிக்கப்படுகின்றது. சாதாரணமாக மக்கள் ஒரு கூட்டத்தை கூட கூட்ட முடியவில்லை. என்பதை தெளிவாக தெரிவித்திருந்தோம்.

இதேபோன்று வடக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் உள்ளமையினால் இலங்கையின் மற்றய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாணம், அதிகமாக புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கே ஆளுநருடையதும், பிரதம செயலாளரினதும் ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக வடமாகாணசபையை முடக்கும் நடவடிக்கையே நடக்கின்றது. என தெரிவித்தோம். இதன்போது அவர்கள் கேட்டார்கள் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் உருவானால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நினைக்கிறீர்களா? என நாம் அதற்கு கூறினோம். இன்று இந்த அரசாங்கம் செய்வதையே மற்றய அரசாங்கங்களும் செய்தன. இனிமேலும் செய்யப்போகின்றன.

எனவே ஆட்சிமாற்றத்தினால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு அல்லது அரசியல் இலக்கினை அடைய முடியும். என பேசப்படும் பேச்சுக்களில் எமக்கு நம்பிக்கையில்லை. எமக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையில்லை. என தெரிவித்தோம். என்றார்.

TAGS: