பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழம் கிடைக்க வேண்டுமென்று காரசாரமான கருத்தாடல்களை மேற்கொண்டவர்.
இப்போது மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய தோழனாக இருக்கிறார். இது குறித்து தமிழ் மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர் என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுதர்மா கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1985ல் தமிழ் நாட்டில் இடம்பெற்ற டெசோ என்கிற தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் முதல் மாநாட்டிற்கான ஏற்பாட்டாளர்களில் ஒருவராக சுவாமி செயலாற்றினார்.
அந்த மாநாட்டில் சுப்பிரமணியன் சுவாமியின் பங்கு இருந்தது. வாஜ்பாயை அந்த மாநாட்டிற்கு அழைத்து வந்தவரே அவர் தான்.
1984ம் ஆண்டு நியூயோர்க் நகரில் மற்றும் 1988ல் கனடா மொன்றியலிலும் இடம்பெற்ற கூட்டமொன்றில், ராஜீவின் வெளிநாட்டுக் கொள்கைகள் பிழை, இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது தவறு, தமிழீழமே தீர்வாக அமைய வேண்டுமெனக் கோரியிருந்தார்.
இப்போது ஈழத்தமிழரின் ஜனநாயகத் தலைமை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மகிந்தாவை ஆதரிப்பதையிட்டு ஈழ மக்கள் கவலையுடன் பார்க்கின்றனர்.
இதுவேளை, சுப்பிரமணியன் சுவாமி அவசரகால நிலையின் கீழ் இந்திய அரசு கைது செய்ய முயன்ற போது சீக்கியர் போல மாறுவேடமிட்டு இலங்கையூடாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார் என்பது உள்ளிட்ட பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
யான் அறிந்தவரையில் இந்த பேர்வழி அன்றிலிருந்து இன்றுவரை வடவனின் அடிவருடியாகவே இருந்து வந்துள்ளான்.தற்பொழுது சிங்களவனின் பாதத்தை தொழுது கொண்டிருக்கிறான்.சீக்கியராக வேடமிட்டு இலங்கை வழியாக இவன் தப்பித்து சென்றிருக்கிறான் என்றால் இந்த இன துராகி பலே கில்லாடியாக இருந்திருப்பான் போல் தெரிகிறது.
இவன் அமெரிக்காவின் எடு புடி,CIA வின் ஓடும்பிள்ளை,தமிழரின்
துரோகி! காலம் விரைவில் பதில் சொல்லும்….
தமீழிழத்தை அப்படி ஆதரித்தவர் ஏன் இப்படி ஆனார் என்பதற்கான பின்னணி என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள விழைவது இயற்கை தான்! ஜெயலலிதாவைக் கம்பி எண்ண வைத்தவரும் அவர் தானே!