தமிழர்களுக்கான பரிகார நீதிகோரும் கையெழுத்து போராட்ட பிரதி பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திடம் கையளிப்பு!

tgte-007ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன், முள்ளிவாய்க்கால் தமிழீழத் தேசிய துக்க நாள் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் போராட்ட பிரதி, முறையாக பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக் கையெழுத்துப் சேகரிப்பு பிரதியில், நில அபகரிப்பு – ஆட்கடத்தல் சிங்களக் குடியேற்றம் உட்பட பல்வேறு வடிவங்கள் ஈழத் தமிழினத்தின் மீது தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்து நிறுத்தக் கோரியும், அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு பொதுநன வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் உள்ளடக்கப்பட்டிருந்ததது.

இதேவேளை பிரித்தானியாவில் இருந்து தமிழர்களை நாடுகடத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த மே 12ம் நாள் முதல் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிநிதிகளின் முதற் தொகுதியினை இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் நிமலன் சீவரட்ணம் தலைமையில் இளையோர்கள் கையளித்திருந்தனர்.

இந்நாளில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் அடையாள ரீதியான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த அடையாள ஒன்றுகூடலில் துணை நகரபிதா சுரேஸ் கிருஸ்ணா அவர்களும், Nation without States அமைப்பு பிரதிநிதிகள் Dr Jawad Mella , Ms.Doris Jones ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது தோழமையினைத் தெரிவித்திருந்தனர்.

TAGS: