பதுளை அநாதை சிறார்களைப் பொறுப்பேற்க விருப்பம்! வடமாகாணசபை அறிவிப்பு!!

vikneswaran111பதுளை மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து அநாதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை பொறுப்பேற்க வடமாகாணசபை ஆர்வம் கொண்டுள்ளது. நேற்று வடக்கு மாகாணசபையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில்,

மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நிலச்சரிவு இடரால் 75 சிறுவர்கள் வரையில் தாய்,தந்தையை இழந்து தவிக்கின்றனர். அவர்களைப் பொறுப்பேற்பதற்காகக் கொழும்பு அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது.

குறித்த 75பேரும் தமிழ்ச் சிறுவர்கள் அவர்களை கொழும்பு அரசு பொறுப்பேற்பதன் மூலம், எதிர்காலத்தில் மொழி ரீதியாக கலாசார ரீதியாக அவர்களை மாற்றக்கூடும். எனவே குறித்த சிறுவர்களை வடக்கு மாகாண சபை பொறுப்பேற்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

TAGS: