வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நாளை செவ்வாய்க்கிழமை டெல்லி செல்லவுள்ளார். அவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னதாக தனிப்பட்ட விஜயமாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தனிப்பட்ட நிகழ்வொன்றில் பங்கெடுக்க இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் முதலமைச்சர் பதவியேற்ற பின்னர் அவ்வாறு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு முதல் தடவையாக இந்தியா செல்வது கட்சி தலைமையிடையே விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
எனினும் தற்போது அவர் டெல்லியில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்திய பின்னர் தனிப்பட்ட நிகழ்வில் பங்கெடுப்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மையில் டெல்லி பயணமான கூட்டமைப்பு தலைமையிடம் இந்திய பிரதமர் மோடி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்திப்பது தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விக்னேஸ்வரன் முன்னால் உயர் நீதிபதி மாத்திரம் அல்ல ..சிங்கள பகுதிகளில் நடக்கும் கருத்தரங்குகளில் கூட தமிழர் வரலாறு உரிமை பற்றி ஆணித்தரமாக் எடுத்து சொல்பவர் ..சமீபத்தில் இலங்கை வரலாறு திருத்தி எழுத பாடல் வேண்டும் என்று சொன்னவர் ..தமிழ் .சிங்கள மக்களின் மதிப்பை பெற்ற எந்த குற்ற சாட்டிலும் இல்லாத ஒருவர் …சம்பந்தன் அமெரிக்க ராஜாங்க அமைச்சால் அடிக்கடி அழைக்க படுபவர் …..தமிழ நாடு தலைவர்கள் போல அல்ல இவர்கள்
தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள்தான் வேறு வழியில்லாமல் டில்லிக்கு காவடி தூக்குகிறார்கள் என்றால் இலங்கையின் தமிழ் மாநில முதலமைச்சரும் டில்லிக்கு காவடி தூக்குகின்ற அவல நிலை ஏற்பட்டு விட்டதே.ஈழத் தமிழர்களின் சுய அதிகாரத்துவ பிரச்னை அல்லது ஈழத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாணிப இருவழி ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்.