யுத்த குற்ற ஆவணங்களை தயாரிப்பதற்காக, வெற்றி காகிதங்களில் கையெழுத்துகளை பெறுவதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
வடமாகாணத்தில் வெற்றி காகிதங்களில் கையெழுத்து பெற்று யுத்த குற்ற ஆவணங்களை தயாரித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இவ்வாறான ஆவணங்கள் மீட்கப்பட்டிருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விஜேந்திரகுமார் என்ற ஒருவரே இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக போலியான ஆவணங்களை திரட்டியதாக அந்த பத்ரிகை கூறி இருந்தது.
எனினும் இதனை நிராகரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் வெற்றுகாகிதங்களில் கையெழுத்து பெற்று வந்தமைக்காக கைதானதாக கூறப்படுகின்றவருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு போலியான ஆதாரங்களை திரட்ட வேண்டிய அவசியம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான நிலைப்பாட்டை தோற்றுவிப்பதற்காக இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.