தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி செல்வது தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர காவற்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர்.
அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு தமிழகத்தில் உள்ள அகதிகள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயனிக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று காவற்துறையினர் அகதிகளிடம் கோரியுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக பயணிப்பதால் பல்வேறு ஆபத்துக்களை சந்திப்பதுடன், உரிய இடத்துக்கு போய் சேர முடியாது என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
பாதுகாப்பு கருதி அம்முடிவு எடுக்கப்பட்டாலும் அகதி முகாமை விட்டு ஈழ அகதிகள் வெளியேறுவதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும்.மிக ஆபத்தான கடல் பயணம் என்று தெரிந்தும் அதனை ஈழ அகதிகள் எதிர் கொள்கிறார்கள் என்றால் அதைவிட கொடுமை ஈழ அகதிகள் முகாமில் நடந்திருக்க வேண்டும்.அனைத்தையும் இழந்து வந்த ஈழத் தமிழனுக்கு தஞ்சம் புகுந்த இடத்தில் கூட நிம்மதி இல்லையே.அதுவும் வந்தாரை வாழ வைக்கும் பூமியில்.