ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு சாட்சியம் திரட்ட அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் பான் கீ மூன் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசாரணைக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வருவதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு விசாரணைக்குழுவினர் சந்தர்ப்பம் வழங்கவில்லை.
புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹூசெய்ன் சாட்சியங்கள் திரட்டுவது குறித்து வெளியிட்ட கருத்து சரியானதே என பான் கீ மூன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.