கமரூன் 2014 ல் கூட இலங்கைக்கு ஆயுதங்களை விற்கிறார்: அதிரும் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது !

ccnஇலங்கைக்கு அதி நவீன ஆயுதங்களை விற்பனை செய்து வரும் நாடுகளில், பிரிட்டனும் முதலிடம் வகிக்கிறது என்பது பெரும் அதிர்சி தரும் விடையமாக அமைந்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள், சமீபத்தில் இலங்கை சென்று யாழ்பாணமும் சென்று மக்களை சந்தித்தார். மேலும் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடைபெறவேண்டும் என்று அவர் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். பாரிய மனித உரிமை மீறல் இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்றது என்று அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதுபோன்று பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றம் இழைத்து வரும் நாடுகளை கறுப்பு பட்டியலில் போடுகிறது சர்வதேச நாடுகள். கறுப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்வது கிடையாது.

ஆனால் 2014 (இந்த வருடம்) பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு 16 நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது. இதன் பிரகாரம் பல நவீனரக ஆயுதங்களை, அன் நாடுகளுக்கு பிரித்தானியா விற்கவுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இலங்கையும் அடங்குகிறது என்பது தான் மேலதிக அதிர்ச்சியான தகவல் என பல சர்வதேச ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், மெளனம் காத்து வருகிறது பிரித்தானிய அரசு. பிரித்தானியாவில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரது மனதையும் புண்படுத்தும் விதத்திலேயே இவ்விடையம் அமைந்துள்ளது.

TAGS: