ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருடன் சமாதானப் பேச்சுவார்த்தை?

zeid_zeidஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னுடன் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளது.

இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்கு பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் சயிட் அல் ஹுசெய்னிற்கு விளக்கம் அளிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் பற்றிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது.

TAGS: