ஜனாதிபதி தேர்தலில் ஆதரளிப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு ஆறு நிபந்தனை

tna_logoஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறு நிபந்தனைகளை பிறப்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குதல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை மீள அளித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்தல்,  13ம் திருத்தச் சட்டத்தை விரிவாக அமுல்படுத்தல் உள்ளிட்ட காரணிகள் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தமிழ்நாட்டில் வைத்து இந்த நிபந்தனைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நிபந்தனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் என சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: