மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளித்தவரின் விபரங்கள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா.வுக்கான இலங்கையின் துணை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தற்போது கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரியொருவரும் ரகசியமான முறையில் ஜெனீவா மனித உரிமைகள் குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர் இல்லை என்றும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அவர் வடக்குப் பகுதிக்கு சென்றதற்கான ஆதாரங்களும் இல்லை என்றும் அரசாங்கம் மறுத்துள்ளது.
அத்துடன் முன்னாள் இராணுவ அதிகாரி என்று சொல்லிக் கொள்ளும் குறித்த நபர், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. -http://www.tamilwin.com