மருத்துவர்களும் மருந்துகளும் இல்லாத நிலையில் மலையக மருத்துவமனைகள்! தொடர் துன்பத்தில் மக்கள்

Agarapatana-51-600x337மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படும் போது முதலில் வைத்தியர்களை நாடுவதோடு, அவர்களை கடவுளாகவும் கருதுகின்றார்கள். எமது அரசாங்கங்கத்தில் அரச வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டு இலவச சிகிச்சைகள், மருந்துகள் நோயாளர்களுக்கு வழங்கினாலும் அது எந்த அளவுக்கு மக்களுக்கு சாதகமாக அமைகின்றது? மலையக பகுதிகளில் பல இடங்களில் அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்ற போதிலும் அதன் சேவைகள் உறுப்படியாக இடம் பெறுகின்றது என கூறமுடியாது. இதே வேலை மக்களும் வைத்தியசாலைகள் தொடர்பாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

சில வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாமலும் அடிப்படை வசதியற்ற நிலையிலும் வைத்தியர்கள் மட்டும் ஊழியர்கள் காணப்படுவது மலையக சமூகத்திற்கு கிடைத்த அவலமாகும். அத்தோடு சில நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இன்மையால் தனியார் மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளுமாறு துண்டுகளை வழங்குகின்றனர்.

தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் எட்வான்ஸ் மட்டும் சம்பள நாட்களில் பணம் கைவசம் இருக்கும் ஏனைய நாட்களில் இவ்வாறு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களிடம் வைத்தியசாலையில் மருந்து இல்லை.

பணம் கொடுந்து பாமசிகளில் பெற்றுக்கொள்ளுங்கள் என்பது எந்தளவு நியாயமாக இருக்கும். சில நோயாளர்கள் வைத்தியரிடம் துண்டுகளை பெற்றுக்கொண்டு மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை காணப்படுவதோடு நகை அடகு வைக்கும் கடைகளை நோக்கி செல்வதும் மனவேதனைக்குரிய விடயமாகும்.

அரசாங்கத்தில் பல அதிகாரிகள் நியமித்திருக்கின்ற போதிலும் எந்த அதிகாரிகள் இவ்வாறான குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்திருக்கின்றார்கள்?

அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை முதல் வைத்தியர்கள் இல்லாமல் சிகிச்சைகாக சென்ற பொதுமக்கள் பல இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இவ்வைத்தியசாலையில் 3 வைத்தியர்கள் கடமையாற்றி வந்த போதிலும் ஒரு வைத்தியர் பிரசவ விடுமுறைக்காகவும், மற்றுமொரு வைத்தியர் சுகயீன காரணமாகவும் விடுமுறை எடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வைத்திய அதிகாரி மூன்று நாட்களாக தனியாக வைத்தியசாலையை நிர்வாகித்ததோடு வெளிநோயாளர்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லும் பொழுது தவறி விழுந்ததில் கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த நிலையில் அக்கரப்பத்தனை வைத்திசாலையில் மாற்று வைத்தியர்கள் நியமிப்பதற்கு எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை.இதன் காரணமாக மூன்று நாட்களாக நோயாளர்கள் கர்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைகாக வரும் போது திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

சில நோயாளர்கள் கடும் வறுத்தத்தின் காரணமாக செய்வது அறியாமல் அழுது புலம்பினார்கள். அத்தோடு சில பணியாளர்கள் நோயாளர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்களில் தொலைபேசி இலக்கங்கள் இயங்காமல் அவர்களின் பிரத்தியேக செயளாலர்களின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களின் பதிலும் திருப்திகரமாக அமையவில்லை.

இதே வேளை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான இராதாகிருஸ்ணன் அவரின் தொலைபேசி மாத்திரமே தொடர்புகொள்ள முடிந்தது.

வைத்தியசாலை தொடர்பாக இவர் தெரிவிக்கையில்,
சுகாதார உயர் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிப்பதாக தெரிவித்தார். எது எவ்வாறாக இருந்தாலும் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் அசமந்த போக்காக மலையக அரசியல்வாதிகள் செயல்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி வைத்தியர்களை நியமிக்க சுகாதார அமைச்சரும், மலையக அரசியல் தலைவர்களும் நடவடிக்கை எடுப்பார்களா? -http://www.tamilcnnlk.com

Agarapatana (1)

Agarapatana (2)

Agarapatana (3)

Agarapatana (4)

Agarapatana (5)

Agarapatana (6)

TAGS: