தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர் தினத்தை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள் இன்றைய தினம் ஒட்டப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் இம்மாதம் 27ம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.பல்கலைகழகத்திற்குள் ஒவ்வொரு வருடமும் நினைவு நாள் கடுமையான எதிர்ப்பினையும் மீறி அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வருடம் மாவீரர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்வருடம் அவ்வாறான விடுமுறை அறிவிக்கப்படாது என துணைவேந்தர் அண்மையில் பத்திரிகையாளர்
சந்திப்பில் கூறியிருந்தார். எனினும் நேற்றய தினம் திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை பல்கலைகழக வளாகத்திற்குள் பல இடங்களில் மாவீரர் தினத்தை நினைவில் கொள்ளும் வகையிலான பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை காணமுடிந்தது.
மேலும் இச்சம்பத்தையடுத்து படையினர் அப்பகுதிக்குள் நுழைந்ததுடன் பின்னர் பல்கலைகழகத்திற்குள் நுழைந்த படைப்புலனாய்வாளர்கள் மேற்படி பிரசுரங்களில் பலவற்றை கிழித்து எறிந்துள்ளனர்.
வீரர்கள் வாழும் ஈழ நாட்டை வென்றவர்கள் கிடையாது
வாழும் வேலும் ஏந்திய மறவர் வீழ்ந்ததும் கிடையாது.
மலரும் ஒரு நாள் தமிழ் ஈழம்.வீழும் சிங்களவனின் கொட்டம்.
கார்த்திகை மலர்வதை தடுப்பாரும் உண்டோ.
ஈழம் மலர்வதை வேறுப்பாரும் உண்டோ.