2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் மகிந்தரின் பக்கம் இருந்த பல செல்வாக்கு மிக்க தலைவர்கள் எதிர்கட்சிக்கு தாவிட்டார்கள். தற்போது கூட மேலும்சிலர் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். வரும் ஜனவரி மாதம் தேர்தலில் மகிந்தர் தோற்றுப்போனால், அவரை ஏப்பிரல் மாதம் சர்வதேச நீதிமன்றில் ஒப்படைப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர் ஒருவர் கூறியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. இத்தவலை உறுதிசெய்ய முடியவில்லை. மகிந்தர் ஜனாதிபதி என்னும் பட்டத்தை இழந்தால் மறு நிமிடமே அவர் செல்லாக் காசு ஆகிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த விடையம். அவர் பல உலக நாடுகளுக்கு செல்லும்வேளை ஒரு நாட்டின் அதிபர் என்ற வகையில் தான், அவருக்கு அதி உயர் ராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அவர் மீது அன் நாட்டில் வழக்கு இருந்தாலும், அது செல்லுபடியாகாது. ஏன் எனில் அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் மகிந்த நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்டால், இந்த பாதுகாப்பு அனைத்தும் தகர்ந்துபோய் விடும். புலம்பெயர் நாடுகளில் உள்ள பல தமிழர்கள் மீண்டும் மகிந்தர் மீது வழக்குகளை போட்டு அதனை நிலுவையில் வைத்திருப்பார்கள். எச்சந்தர்பத்திலும் மகிந்தர் மீண்டும் அன் நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை தோன்றும். அவரது நட்பு நாடுகளான சீனா, மலேசியா, மற்றும் மாலை தீவு போன்ற நாடுகளுக்கு மட்டுமே மகிந்தரால் செல்ல முடியும்.
இலங்கையில் மைத்திரி ஜனாதிபதியாக வந்தால், அவர் தற்போது உள்ள மகிந்தரின் கட்சி அரசை நிச்சயம் கலைத்துவிடுவார். இதனால் மேலும் ஒரு தேர்தலை நாடு சந்திக்கவேண்டி வரும். இதேவேளை தாம் வெற்றிபெற்றால் எஞ்சியுள்ள புலிகளையும் அழிப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது, K.P , கருணா, பிள்ளையான் போன்ற முன் நாள் புலிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகும். K.P நிச்சயம் கைதுசெய்யப்படுவார். இதேவேளை கருணா மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. புலிகள் இயக்கத்தை காட்டிக்கொடுத்து, மகிந்த ராஜபக்ஷவை பெரும் தலைவர் என்று வாயால் போற்றிய மனிதர்கள் எல்லோரும் தற்போது தலையில் துண்டைப் போடவேண்டிய நிலையில் உள்ளார்கள். அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத நிலையில் இவர்கள் ஒவ்வொரு இரவையும் கழிக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்.
இதேவேளை நாம் ஒரு விடையத்தை மறந்துவிடக்கூடாது. இலங்கைக்கு சென்று அன் நாடு நல்ல நிலைக்கு திரும்பிவிட்டது என்றும், மகிந்தரின் உதவியின்றி இலங்கையில் எதனையும் செய்யமுடியாது எனவே அவரோடு ஒத்துப்போவதே நல்லது என்றும் சிலர் கதாப்பிரசங்கம் நடத்தி வந்தார்கள். அவர்களும் சற்று சிந்திக்கவேண்டும். அரசியல் என்பது நிலந்தரம் அல்ல. ஆனால் ஒருவர் கொண்ட லட்சியம் மட்டும் தான் நிலந்தரம் ஆகும். எனவே தமிழ் மக்கள் மனதில் கொண்ட லட்சியம் ! மாவீரர்கள் மண்ணில் மடியும்போது கொண்ட லட்சியத்தை எவராலும் அவ்வளவு எழிதில் அழித்துவிட முடியாது ! -http://www.athirvu.com
இந்திய பிரதமர் மோடி.நாலுகால் பாயிச்சலில் பாயிந்து ராஜபச்சே இரத்தத்தை குடித்து ஈழத்தையும்.கச்சத்தீவையும் மீட்டெடுப்பாரா ?பொறுத்திருந்து பார்ப்போம் !
அலை ஓசை நீங்கள்….இன்னுமா இந்தியாவையும் அதன் அதிகார வர்க்கத்தையும் நம்புகிறீர்கள்?…..விழி! எழு!
பி ஜே பி முத்த தலைவர் அத்துவானி தமிழர்கள் ராவணன் பரம்பரை ..சிங்களர் ராமன் வம்சம் ஆகவே ராம வஞ்சத்தை காப்பது நமது தலையாய கடமை என்று பத்திரிக்கை பேட்டியளித்தவர் ..
தெலுங்கர்களும் சின்கலர்பக்கம்தான் நிப்பார்கள் .அங்கு பாதி அதிகாரத்தில் தெலுகு நாயகர்கள்.. மோடி நல்லா செய்வார் தமிழனுக்கு உதவி