தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரியிருந்தது.
எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்தக் கோரிக்கையானது வாக்காளர் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சதித் திட்டமாகும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முகாம்களிலும், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை, புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com