யாழில் மாவீரருக்கு சுடரேற்றியவர்களை தேடும் இராணுவம்! சரணடையக் காலக்கெடு விதிப்பு!

maveerar_nal_20141.pngயாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தமிழீழ மாவீரர் தினத்தன்று விளக்கேற்றிய குற்றச்சாட்டின் கீழ் 11 பொதுமக்களை ஒரு வாரத்திற்குள் தம்மிடம் சரணடைய வேண்டும் என படையினர் காலக்கெடு விதித்துள்ளனர்.

எனினும் அவர்களுள் 8 இளைஞர்கள் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த மாதம் 27ம் திகதி மாவீரர்கள் தினம் உலகில் பல நாடுகளில் அனுட்டிக்கப்பட்டது.யாழ்.குடாநாட்டில் பலத்த கெடுபிடிகளும் போர்க்கால நிலைமைக்கு ஒத்ததான படைக்குவிப்பும் இடம்பெற்றிருந்த நிலையில், யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள பொற்பதி வீதியில் இளைஞர்கள் சிலர் மாவீரர் தினம் அனுட்டிக்கும் வகையில், தீபங்களை ஏற்றியுள்ளனர். இந்நிலையில் தீபம் ஏற்றப்பட்டதும் அந்தப் பகுதியை படையினர் சுற்றி வளைக்க படையினரைக் கண்ட இளைஞர்கள் ஓடியுள்ளனர். எனியும் 3 இளைஞர்கள் படையினரிடம் அகப்பட்டுவிட்டனர்.

நேற்றைய தினம் அவர்ளுடைய வீடுகளுக்கு செல்ல அனுமதித்துள்ள படையினர், அவர்கள் மூவரும் தம்முடன் சேர்ந்து விளக்கேற்றிய மற்றைய 8 இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்குள் படையினரிடம் மீள சரணடையவேண்டும் என படையினர் பணித்திருக்கின்றனர். -http://www.pathivu.com

TAGS: