இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி !

insrichiஇலங்கை கொடியுடன் சீனா கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை அமைச்சர் ஒருவரின் கருத்து மூலம் புலனாகியுள்ளது. இதுவரை காலமும் இலங்கை அரசு இதுதொடர்பாக மூச்சும் காட்டியது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, என்ன நடக்கிறது என்று விரிவாகப் பார்ப்போம்.

சர்வதேச கடற்பரப்பில் கடந்த வருடம் இலங்கை கொடியுடன் மீன்பிடித்த, எட்டு சீனா கப்பல்களும் அரசாங்கத்திற்கு உறுதிவழங்கிய ஆளவு தொகை மீன்களை வழங்கவில்லையென மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத்குணரட்ண தெரிவித்துள்ளார். சீனா இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி இலங்கைக் கொடியுடன் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீனா கப்பல்கள் தாம்பிடிக்கும் மீனில் 10 வீதத்தை வழங்கவேண்டும், எனினும் அவை அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படியா கொஞ்சம் பொறுங்கள் இதுதொடர்பான எந்த கருத்தையும் அரசு முன்னர் வெளியிடவே இல்லையே என்று எவரும் கேட்க்கவே இல்லை.

குறிப்பிட்ட கப்பல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன,சுங்க திணைக்களத்திற்கும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம், அந்த கப்பல்களை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர், குறிப்பிட்ட ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை கொடியை போட்டுக்கொண்டு சீனார்கள் என்ன மீன் பிடிப்பார்களா ? அவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்தியாவை அல்லவா வேவு பார்த்திருப்பார்கள். அப்படி என்றால் மீன் எங்கே அகப்பட்டு இருக்கும் ? அந்த 10 வீத மீனை எவ்வாறு கொடுப்பது ? இந்தியா பல விடையங்களில் கோட்டை விட்டு வருகிறது. -http://www.athirvu.com

TAGS: